ப்ளூ வேல் விளையாட்டின் அட்மின் தற்போது ரஷ்யாவில் கைது செய்யப் பட்டுள்ளார்.ப்ளூவேல் சவாலை மேற்கொள்ள தயக்கம் காட்டினால், தங்களை கொன்றுவிடுவோம் என தொடர் கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ள சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.உலகையே ஒரு விதத்தில் உலுக்கி வரும் ப்ளூ வேல் விளையாட்டு தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், ப்ளூவேல் விளையாட்டு கொடுத்த நிர்பந்தத்தின் காரணமாக மதுரையை சேர்ந்த விக்னேஷ் என்பவர் தற்கொலை செய்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கதுஇந்நிலையில் இந்த விளையாட்டிற்கு பல பேர் உடந்தையாகவும், ஆன்லைன் ஹேக்கேர்ஸ் இருந்தாலும் தற்போது இந்த விளையாட்டின் ஒரு அட்மினாக செயல்பட்டு வந்தவர்களில் ஒரு பெண் கைதாகி உள்ளார்தென்கிழக்கு ரஷ்யாவில் உள்ள கபாராவ்ஸ்க் ராய் என்ற பகுதியில் வசித்து வந்த 17 வயது பெண், ரஷ்ய தலைநகரான ஸ்கோவில் கைது செய்யப் பட்டு உள்ளார்.இவர் "மரணக்குழுஅட்மின் "( death group administrator ) என்ற பெயரில் குரூப் உருவாக்கி, அதன் மூலம் பல பேரை கவர்ந்துள்ளார். பின்னர் இந்த விளையாட்டின் டாஸ்கை செய்து முடிக்க வேண்டுமென , குரூப்பில் உள்ள பலருக்கும் மிரட்டல் விடுத்துள்ளார். இதனை கண்டறிந்த போலீசார் தற்போது அந்த பெண்ணை கைது செய்துள்ளனர் இதே போன்று உலகின் பல்வேறு நாடுகளில் ப்ளூ வேல் விளையாட்டை வழிநடத்தும் சில அட்மின்களை கண்டறியப் பட்டு கைது செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது