குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கும் அற்புத திட்டம்..!

Published : Jan 14, 2019, 01:35 PM IST
குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கும் அற்புத திட்டம்..!

சுருக்கம்

குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கும் அற்புத திட்டத்தை,அம்மாநில முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். இந்த அற்புத திட்டத்தால்  சிக்கிம் வாழ் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  

குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கும் அற்புத திட்டம்..! 

குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கும் அற்புத திட்டத்தை, அம்மாநில முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். இந்த அற்புத திட்டத்தால் சிக்கிம் வாழ் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு நடைப்பெற்ற சட்டசபை குளிர்கால கூட்டதொடரின் போது, இந்த திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என சிக்கிம் அரசு தெரிவித்து இருந்தது.

இதனை அடுத்து, இந்த திட்டத்தின் மூலம் முதற்கட்டமாக 12,000 ஆயிரம் பேருக்கு வேலை வழங்க அம்மாநில அரசு முடிவு செய்து, அதற்கான திட்டத்தை காங்டாக்கில் இன்று அரசு சார்பாக நடைபெற்ற விழாவில் அம்மாநில முதல்வர் பவன் சாம்லிங் தொடங்கி வைத்து மக்களிடேசியே உரை நிகழ்த்தினார்.

சிக்கிம் அரசால் கொண்டுவரப்பட்டுள்ள இந்த திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. குடும்பத்தில் ஒருவருக்கு கட்டாயம் அரசு வேலை என்ற பட்சத்தில், அவரவர் கல்வித்தகுதிக்கு ஏற்ப வேலையை பெறுவார்கள். இதனால் ஒவ்வொரு குடும்பத்தின் பொருளாதாராமும் மேம்படும். வேலை இல்லா திண்டாட்டமும்  குறையும் என மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

டெல்லியில் 2 நாள் தங்கினாலே எனக்கு நோய் வருது.. காற்று மாசால் மனம் நொந்த நிதின் கட்கரி!
இந்தியாவை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை... கடைசியில் மண்டியிட்ட வங்கதேசம்..!