கூட்டுச் சேர்ந்து வேட்டு வைத்த மாயாவதி-அகிலேஷ் .... பதற்றத்தில் பாஜக..!

By Asianet TamilFirst Published Jan 14, 2019, 10:32 AM IST
Highlights

நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் பாஜக பெரும் பின்னடவைச் சந்திக்கும் என்று கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் 71 தொகுதிகளில் பாஜக கூட்டணி வெற்றிபெற்றது. இந்த முறை பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாடி கூட்டணியால் பாஜக அதிகபட்சமாக 29 தொகுதிகள் வரை வெல்லவே வாய்ப்புகள் இருப்பதாகக் கருத்துக்கணிப்பு கூறுகிறது.

உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியும் சமாஜ்வாடியும் கூட்டணி சேர்ந்துள்ளதால், பாஜகவுக்கு நெருக்கடி ஏற்படும் என்று அண்மையில் வெளியான கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. 

இந்தியா டிவி - சிஎன்எக்ஸ் கருத்துக்கணிப்பு கடந்த வாரம் வெளியானது. இந்தக் கருத்துக்கணிப்பில் பாஜக கூட்டணி 245 இடங்களில் வெற்றி பெறும் என்றும் காங்கிரஸ் கூட்டணி 145 இடங்களிலும் பிற கட்சிகள் 152 இடங்களிலும் வெற்றி பெறும் என்று கூறப்பட்டன. இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியும் சமாஜ்வாடியும் உத்தரப்பிரதேசத்தில் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளன. இதனால் கருத்துக்கணிப்பில் உத்தரப்பிரதேசம் பற்றி கணிப்புகள் மீண்டும் கோடிட்டு காட்டப்பட்டுள்ளன. 

இதன்படி நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் பாஜக பெரும் பின்னடவைச் சந்திக்கும் என்று கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் 71 தொகுதிகளில் பாஜக கூட்டணி வெற்றிபெற்றது. இந்த முறை பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாடி கூட்டணியால் பாஜக அதிகபட்சமாக 29 தொகுதிகள்வரை வெல்லவே வாய்ப்புகள் இருப்பதாகக் கருத்துக்கணிப்பு கூறுகிறது.

  

மாறாக பகுஜன் சமாஜ் கட்சி - சமாஜ்வாடி  கூட்டணி 50 தொகுதிகள் வரை கைப்பற்றக்கூடும் என்று கருத்துக்கணிப்பு கூறுகிறது. கடந்த முறை பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒரு இடமும் கிடைக்கவில்லை. சமாஜ்வாடி கட்சி 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் சூழலில், அந்தக் கட்சியின் பாரம்பரிய தொகுதிகளான அமேதி, ரேபரேலி ஆகிய தொகுதிகளில் மட்டும் காங்கிரஸ் வெற்றி பெறும் என்றும் கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

click me!