
கேரளா மாநிலம் அருகே உள்ள பாலக்காடு மாவட்டம் பிரபலமானது. குறிப்பாக தமிழக - கேரளா எல்லையை ஒட்டியது தான் பாலக்காடு.
இங்கே உள்ள தமிழக - கேரளா எல்லையான நடுப்புனி சோதனை சாவடியில் தினமும் ஏராளமான கனரக வாகனங்கள் கேரளாவில் வருவது வழக்கமான ஒன்றாகும். வாகன ஓட்டுகளிடம் சோதனையில் ஈடுபடும் போலீசார் லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே அங்கு நடுப்புனி சோதனை சாவடியில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, சோதனை சாவடி அருகே இருந்த வாழை மரத்தில் சுருட்டி வைக்கபட்டு இருந்த ரூபாய் 500 மற்றும் 100 தாள்கள் கண்டெடுக்கப்பட்டது. இந்த வாழை மரத்தில் இருந்து 8,900 ரூபாய் கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடத்தியதில் அலுவலக உதவியாளர் விஜயகுமார் மற்றும் லைப் ஸ்டாக் இன்ஸ்பெக்டர் ஷாஜி, கள அலுவலர் அசோகன் ஆகியோர் வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் பெற்றது உறுதி செய்யப்பட்டது.
இதையும் படிங்க..அவர பெரிய ஆள் ஆக்காதீங்க.. அண்ணாமலை பற்றி என்கிட்ட கேட்காதீங்க - கடுப்பான இபிஎஸ்
தொடர்ந்து, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது போன்று பலமுறை பணங்கள் கைப்பற்றப்பட்டிருக்கிறது என்றும், மரத்தில் வைக்கப்பட்டது தற்போது தான் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாழைமரத்தில் இருந்து பண தாள்கள் எடுக்கப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க..அண்ணாமலை சொன்னதெல்லாம் பொய்.. பதறியடித்து போய் விளக்கம் கொடுத்த மெட்ரோ ரயில் நிர்வாகம்