மோடியை கொல்ல சதித் திட்டம்! சிக்கியது மாவோயிஸ்டுகள் லெட்டர்! உளவுத்துறைக்கு சொன்ன மும்பை போலீஸ்!

 
Published : Jun 08, 2018, 03:50 PM ISTUpdated : Sep 19, 2018, 02:30 AM IST
மோடியை கொல்ல சதித் திட்டம்! சிக்கியது மாவோயிஸ்டுகள் லெட்டர்! உளவுத்துறைக்கு சொன்ன மும்பை போலீஸ்!

சுருக்கம்

Pune Police intercepts internal communication of Maoists planning a Rajiv Gandhi type assassination of Prime Minister Modi

பிரதமர் நரேந்திர மோடியை கொல்ல மாவோயிஸ்டுகள் சதி திட்டமிட்டுள்ளதாக சந்தேகம் இருப்பதாக மத்திய மகாராஷ்ட்ரா போலீஸ் உளவுத்துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதம் மகராஸ்டராவில் தலித் மாநாடு நடந்தது அதைத்தொடர்ந்து வன்முறை நிகழந்தது. இந்த வன்முறை தொடர்பாக போலீஸ் விசாரணையில் மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்பு இருக்கலாம் என பலரை தொடர்ந்து விசாரணை செய்து வந்தனர்.

அப்போது, மாவோயிஸ்டுடன் தொடர்பு உள்ளதாக கூறப்படும் “ரோனா ஜேக்கப்” என்பவரை மகாராஷ்டிர மாநில போலீசார் கைது விசாரணை நடத்தி வந்தது. அப்போது ரேனா ஜேக்கப்பிடமிருந்து ஒரு கடிதம் கைப்பற்றப்பட்டுள்ளது.



அந்த கடிதத்தை படித்த மகாராஷ்டிரா போலி அதிர்ச்சி அடைந்தனர், அதில், பிரதமர் நரேந்திர மோடியை கொல்ல இருப்பதாகவும், மக்களுடன் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் மோடிக்கு குறி வைக்க திட்டமிட்டுள்ளதாகவும், ராஜீவ் காந்தி போன்ற நிகழ்வு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, இந்த கடித விவகாரம் குறித்து மகாராஷ்டிரா போலீஸ் மத்திய உளவுத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
"இந்தி படி.. இல்லன்னா டெல்லியை விட்டுப் போ!" பயிற்சியாளரை மிரட்டிய பாஜக பெண் கவுன்சிலர்!