குனோ தேசிய பூங்காவில் மற்றொரு சிறுத்தை மரணம்! 4 மாதங்களில் 7வது சாவு!

Published : Jul 12, 2023, 02:48 PM ISTUpdated : Jul 12, 2023, 03:02 PM IST
குனோ தேசிய பூங்காவில் மற்றொரு சிறுத்தை மரணம்! 4 மாதங்களில் 7வது சாவு!

சுருக்கம்

இறந்த நான்கு வயது ஆண் சிறுத்தை தேஜாஸ் பிப்ரவரி மாதம் தென்னாப்பிரிக்காவில் இருந்து குனோ தேசிய பூங்காவுக்குக் கொண்டு வரப்பட்டது.

மத்தியப் பிரதேசத்தின் குனோ தேசியப் பூங்காவில் செவ்வாய்கிழமை மேலும் ஒரு ஆப்பிரிக்க சிறுத்தை, சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்துள்ளது. நான்கு மாதங்களில் ஏழாவது சிறுத்தை மரணம் அடைந்துள்ளது என மூத்த வனத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இறந்த தேஜாஸ் என்ற ஆண் சிறுத்தை இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தென்னாப்பிரிக்காவில் இருந்து ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவுக்குக் கொண்டு வரப்பட்டது. இந்தச் சிறுத்தையின் மரணம் கடந்த ஆண்டு செப்டம்பரில் மிகுந்த ஆரவாரத்துடன் தொடங்கப்பட்ட சிறுத்தை மறுவாழ்வுத் திட்டத்திற்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது.

மார்ச் மாதம் முதல் நமீபிய சிறுத்தையான ஜ்வாலாவிற்குப் பிறந்த மூன்று குட்டிகள் உட்பட ஏழு சிறுத்தைகள் குனோ தேசிய பூங்காவில் இறந்துவிட்டன.  "சுமார் நான்கு வயதுடைய சிறுத்தை தேஜஸ், பூங்காவில் உள்ள மற்ற சிறுத்தைகளுடன் சண்டையிட்டதன் காரணமாக இறந்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம்" என்று வனவிலங்கு முதன்மை தலைமைப் பாதுகாவலர் (PCCF) ஜே. எஸ். சவுகான் தெரிவித்துள்ளார்.

பாலியல் வழக்கு குறித்து கேட்டதால் ஆத்திரத்தில் பெண் செய்தியாளரின் மைக்கை உடைத்துப் போட்ட பிரிஜ் பூஷன்!

கழுத்தில் சில செவ்வாய்கிழமை காலை 11 மணியளவில் கூண்டு எண் 6 இல் தேஜாஸின் காயங்களைக் கண்காணிப்புக் குழு கண்டறிந்துள்ளனர். அதைத் தொடர்ந்து கால்நடை மருத்துவர்கள் அழைக்கப்பட்டனர். கால்நடை மருத்துவர்கள் குழு மதியம் 2 மணியளவில் அங்கு சென்றது. ஆனால், அப்போது சிறுத்தை இறந்து சடலமாக கிடந்தது என்று  அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பு கூறுகிறது.

இந்த சிறுத்தை மரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே தேஜஸ் சிறுத்தை இறந்ததற்கான சரியான காரணம் தெரியவரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜ்வாலா சிறுத்தை இந்த ஆண்டு மார்ச் மாதம் நான்கு குட்டிகளைப் பெற்றெடுத்தது. ஆனால் அவற்றில் மூன்று மே மாதத்தில் நீரிழப்பு மற்றும் பலவீனம் காரணமாக இறந்தன.

லேண்டிங் கியர் செயல் இழப்பு... பெங்களூருவில் அவசரமாக தரையிறங்கிய விமானம்!

PREV
click me!

Recommended Stories

மதக் கூட்டங்களில் பெண் ஜிஹாதிகள்..! இந்தியாவிற்கு எதிராக படுபயங்கர சதித்திட்டம்..! எல்லையில் தீவிர பாதுகாப்பு..!
IndiGo பயணிகளுக்கு ஷாக் கொடுத்த CEO.. இன்னும் 10 நாளைக்கு இது தான் கண்டிஷன்..!