
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் உற்சாகமாக தொடங்கியது.
வருடம் தோறும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புரட்டாசி மாதம் நவராத்திரியின் போது வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெறும்.
அந்த வகையில், இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கிது.
இந்த பிரமோற்சவ விழா அக்டோபர் 1ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அந்த இறுதி நாளில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரமோற்சவ விழா முடிவடைகிறது.
நவராத்திரியில் பிரம்மோற்சவம் நடைபெறும் 9 நாட்களும் பலவித வாகனங்களில் ஏழுமலையான் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
பிரம்மாண்ட நாயகனின் பிரம்மோற்சவத்திற்காக புதிய மஞ்சள் துணியில் கருட பகவான் உருவம் வரையப்பட்ட கொடியை நான்கு மாடவீதியில் உற்சவ மூர்த்திகளுடன் ஊர்வலமாக கொண்டுவரப்படுகிறது.
மேலும் தங்க கொடிமரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் மலையப்ப சுவாமி முன்னிலையில் மந்திரங்கள் முழங்க கருட கொடி ஏற்றப்படுகிறது.