Cow Hug Day-க்கு நாடு முழுவதும் கண்டனம்... அறிவிப்பை திரும்பப்பெற்றது இந்திய விலங்குகள் நல வாரியம்!!

Published : Feb 10, 2023, 06:28 PM IST
Cow Hug Day-க்கு நாடு முழுவதும் கண்டனம்... அறிவிப்பை திரும்பப்பெற்றது இந்திய விலங்குகள் நல வாரியம்!!

சுருக்கம்

பிப்.14 ஆம் தேதியை பசு அணைப்பு தினமாக கடைப்பிடிக்க வேண்டும் என்ற அறிவிப்பை இந்திய விலங்குகள் நல வாரியம் திரும்பப்பெற்றுள்ளது.

பிப்.14 ஆம் தேதியை பசு அணைப்பு தினமாக கடைப்பிடிக்க வேண்டும் என்ற அறிவிப்பை இந்திய விலங்குகள் நல வாரியம் திரும்பப்பெற்றுள்ளது. வரும் பிப்.14 அன்று காதலர் தினம் கொண்டாட காதல் ஜோடிகள் தயாராகி வரும் நிலையில் பிப்.14-ஐ பசு அணைப்பு தினமாக (Cow Hug Day) கொண்டாட வேண்டும் என்று இந்திய விலங்குகள் நல வாரியம் கடந்த பிப்.8 ஆம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. இதுக்குறித்த அறிக்கையில், ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14 அன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது.

இதையும் படிங்க: மிடில் கிளாஸ் மக்களை பட்ஜெட் வலிமைப்படுத்தியுள்ளது: பிரதமர் மோடி புகழாரம்

அன்றைய தினத்தில் தாய் பசுவின் முக்கியத்துவத்தை மனதில் கொண்டு, பசு அரவணைப்பு தினமாக அனைத்து பசுப் பிரியர்களும் கொண்டாடலாம். பசுக்களை கட்டிப்பிடித்தால் உணர்ச்சி பந்தம் பெருகும். தனிநபர் மகிழ்ச்சியும், குடும்ப மகிழ்ச்சியும் அதிகரிக்கும். எனவே மேற்கத்திய கலாச்சாரத்தை ஒழித்து நமது பாரம்பரியத்தை காப்போம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. விலங்குகள் நல வாரியத்தின் இந்த அறிவிப்புக்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்தன. மேலும் நெட்டிசன்கள் இந்த அறிவிப்பை விமர்சித்து இணையத்தில் மீம்ஸ்களை பகிர்ந்தனர்.

இதையும் படிங்க: அர்ஜுன் பல்லாவை மணந்தார் ஸ்மிருதி இரானியின் மகள்... இணையத்தில் வெளியானது புகைப்படம்!!

இதனிடையே மத்திய அரசின் அறிவுறுத்தலின் படி பிப்.14 ஆம் தேதியை பசு அணைப்பு தினமாக கடைப்பிடிக்க வேண்டும் என்ற அறிவிப்பை இந்திய விலங்குகள் நல வாரியம் திரும்பப்பெற்றுள்ளது. இதுக்குறித்து இந்திய விலங்குகள் நல வாரியம் வெளியிடப்பட்ட அறிக்கையில், கால்நடைத்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலை அடுத்து பசு அணைப்பு தின அறிவிப்பை திரும்பப் பெறுகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Toll Plaza Rules: நீங்க தலைகீழ நின்னாலும் காசு வாங்க மாட்டாங்க.! 10ம் தேதி முதல் அமலாகும் புதிய விதி
விவசாயிகளுக்கு ஜாக்பாட்.. மலிவு விலையில் உரம்.. ரூ.4,317 கோடி கூடுதல் மானியம்!