
மத்திய சுற்று சூழல் மற்றும் வனங்கள் துறை அமைச்சர் அணில் மாதவ் தவே காலமானார். இவருக்கு 60 வயது.
மத்திய பிரதேஷ் மாநிலத்தில் உஜ்ஜைன் மாவட்டம் பாத் நகரில்1956 ஜூலை 6 இல் பிறந்தார். கடந்த 2009 இல் இருந்த ராஜ்ய சபா எம்.பியாக இருந்தவர். நர்மதை நதி பாதுகாப்பு இயக்கத்தில் இணைந்து பங்காற்றியவர்.
கடந்த 2016 ஆம் ஜூலை மாதம் பிரதமர் மோடி அரசின் மத்திய சுற்று சூழல் மற்றும் வனங்கள் துறை அமைச்சராக பதவியேற்றார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுகளாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று காலமானார். இவரின் திடீர் மறைவால் பாஜக தலைவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
இவரின் மறைவையடுத்து பிரதமர் மோடி அவரது குடும்பத்துக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.