எனக்கு வாக்களிக்காவிட்டால், நான் போட்ட ‘ரோட்டை யூஸ்’ பண்ணாதீங்க; பென்ஷனை வாங்காதீங்க…வாக்காளர்களை ‘மிரட்டிய’ முதல்வர்

First Published Jun 23, 2017, 9:30 PM IST
Highlights
Andra chief minister warning the people


எனக்கு வாக்களிக்காவிட்டால், நான் போட்ட ‘ரோட்டை யூஸ்’ பண்ணாதீங்க; பென்ஷனை வாங்காதீங்க…வாக்காளர்களை ‘மிரட்டிய’ முதல்வர்

தேர்தலில் எனக்கு வாக்களிக்காவிட்டால், என் ஆட்சியை விரும்பாவிட்டால், நான் போட்ட சாலையை மக்கள் பயன்படுத்த வேண்டாம், பென்ஷன் தொகையை வாங்க வேண்டாம் என்று ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு வாக்காளர்களிடம் கடுமையாகப் பேசியுள்ளார்.

இடைத் தேர்தல்

ஆந்திர மாநிலத்தில் உள்ள கர்நூல் மாவட்டம், நந்தியாலா தொகுதியின் எம்.எல்.ஏ. பூமா நாகிரெட்டி. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர் கடந்த மார்ச் 12-ந்தேதி திடீரென மரணமடைந்தார். அந்த தொகுதிக்கு விரைவில் நடக்க இருக்கும் இடைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியை வெற்றி பெற வைக்க முதல்வர் சந்திரபாபு திட்டம் வகுத்து செயல்பட்டு வருகிறார்.

ஆலோசனை

ஆனால், அந்த தொகுதியோ ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு மிகுந்த பகுதியாகும். அங்கு வெற்றி பெறுவது என்பது அவ்வளவு எளிதல்ல. இந்நிலையில், நந்தியாலா தொகுதியில் தனது கட்சி உறுப்பினர்கள் சார்பில் நடத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சிக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்றுமுன்தினம் கலந்து கொண்டார்.

கேள்வி கேளுங்கள்

அப்போது அவர் பேசியது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவர் பேசுகையில், “ நம் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள், தொண்டர்கள் பிரசாரத்துக்கு செல்லும் போது மக்களிடம் ஏன் எங்கள் தெலுங்கு தேசம் கட்சிக்கு வாக்களிக்க மாட்டீர்கள் என கேளுங்கள்.

திட்டங்களை கூறுங்கள்

என் அரசு செயல்படுத்திய திட்டங்கள், குறித்து மக்களிடம் எடுத்துக் கூறுங்கள் அது உங்களின் பொறுப்பாகும். நாம் செய்துள்ள நல்ல விசயங்களைக் கூறி மக்களுடன்தான் நாம் இருக்கிறோம் என்பதைக் கூறி நமக்கு வாக்களிக்க கூறுங்கள்.

பயன்படுத்த வேண்டாம்

மக்கள் தெலுங்குதேசம் கட்சியை, அரசை விரும்பாவிட்டால் நம் தெலுங்கு தேசம் கட்சிக்கும், எனக்கும் வாக்களிக்காவிட்டால், என் அரசு போட்ட நல்ல தரமான சாலையை பயன்படுத்த வேண்டாம் என மக்களிடம் கூறுங்கள். நான் கொடுக்கும் பென்ஷன் பணத்தை வாங்காதீர்கள் எனச் சொல்லிவிடுங்கள்.

தயங்கமாட்டேன்

எல்லா பலன்களும் என் அரசில் அனுவித்துவிட்டு, எனக்கு வாக்களிக்காமல் இருப்பதுகுறித்து கேள்வி கேளுங்கள். எனக்கு வாக்களிக்காமல் இருக்கும், மக்களையும், கிராமத்தையும் நான் ஒதுக்கி வைக்க தயங்க மாட்டேன்.

ஏன் ஆதரிக்கவில்லை

விவசாயிகளின் பயிர்கடனான ரூ.1.50 லட்சம் வரைதள்ளுபடி செய்தேன், முதியோர் உதவித் தொகையை உயர்த்தினேன், மாற்றித்திறனாளிகள் உதவித்தொகையை ரூ. ஆயிரமாக அதிகரித்தேன். அனைத்து வகையான உதவிகளையும் நலன்களையும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கிடைக்குமாறு செய்தேன். அனைத்து நல்ல திட்டங்களையும், செயல்களையும் அனைத்து தரப்பு மக்களுக்கும் செய்யும் ஏன் சிலர் நம்மை ஆதரிக்க மறுக்கிறார்கள். எனக்கு தெரிய வேண்டும்.

ஓட்டுக்கு பணம்

இன்னும் சில மக்கள் அரசியல்வாதிகள் ஓட்டுக்காக கொடுக்கும் ரூ.500, ரூ.1000 பணத்துக்காக இருக்கிறார்கள். என்னாலும் ஓட்டுக்கு ரூ. 5 ஆயிரம் வரை கொடுக்க முடியும். ஆனால், அப்படிப்பட்ட அரசியல் செய்வதை நான் விரும்பவில்லை, அதில் இறங்கவும் இல்லை

இவ்வாறு அவர் பேசினார்.

.

click me!