
ஜனாதிபதி தேர்தலில் பாஜனதா வேட்பாளர் ராம் நாத் கோவிந்துக்கு ஆதரவு அளித்து வரலாற்று பிழை செய்துவிடாதீர்கள் நிதிஷ் குமார் என்று ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கோரிக்கை விடுத்துள்ளார்.
ராம்நாத்துக்கு ஆதரவு
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் ராம்நாத் கோவிந்த், பீகார் மாநிலத்தில் ஆளுநராக இருந்தார். ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும், அவருக்கு முதல்வர் நிதிஷ் குமார் ஆதரவு அளித்தார்.
செல்லமாட்டேன்
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கியமுற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும்நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சி, பா.ஜனதா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு அளித்தது அதிர்ச்சியை அளித்தது. ஆனால், இது தொடர்பாக பதில் அளித்த நிதிஷ் குமார், ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு அளித்ததற்காக பா.ஜனதா கூட்டணிக்கு செல்லமாட்டேன் என்றார்.
மறுப்பு
ஆனால், பா.ஜனதா வேட்பாளருக்கு அளித்த ஆதரவை நிதிஷ் குமார் வாபஸ் பெற வேண்டும் என ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ்வேண்டுகோள் விடுத்து இருந்தார். ஆனால், அதையும் நிதஷ் குமார் மறுத்துவிட்டார்.
கோரிக்கை
இந்நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மீரா குமாருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என நிதிஷ்குமாருக்குலாலு பிரசாத் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆதரவு அளிக்காதீர்கள்
இது குறித்து பாட்னாவில் நேற்று நிருபர்களிடம் லாலுபிரசாத் யாதவ் கூறுகையில், “ காங்கிரஸ் கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி வேட்பாளர் மீரா குமார், பீகாரின் மண்ணின் மகள். பா.ஜனதா கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவு அளித்துநிதிஷ் குமார் வரலாற்று பிழை செய்து விடக்கூடாது என்று நான் மீண்டும் அவருக்கு கோரிக்கை விடுக்கிறேன்.
கூட்டணியை பாதிக்காது
நாங்கள் ஒரு வழியில் சென்று கொண்டு இருக்கறோம். ஆனால், நிதிஷ் குமாரோ நாட்டை ‘சங்பரிவார மடமாக’ மாற்ற தேவையான உதவி அளித்து, ஆர்.எஸ்.எஸ். நபருக்கு ஆதரவு அளித்துள்ளார். இந்த விஷயத்தில் எங்கள் இரு கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அது கூட்டணியை பாதிக்காது’’ எனத் ெதரிவித்தார்.
முடிவில் மாற்றமில்ைல
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் பசிஸ்தா நாராயன் சிங் கூறுகையில், “ பா.ஜனதா வேட்பாளர் ராம்நாத் சிங்குக்கு நாங்கள் அளித்த ஆதரவை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை. ஆளுராக ராம்நாத் இருந்தபோது, மாநிலத்தின் வளர்ச்சிக்காக அரசோடு கைகோர்த்து நடந்தவர். பீகார் மாநிலத்துடன் நெருங்கிய தொடர்புடையவர்’’ என்றார்.