எக்ஸ்பிரஸ் ரயில் பயங்கர மோதல்... 5 பேர் உடல்சிதறி பரிதாபமாக உயிரிழப்பு..!

Published : Apr 12, 2022, 10:38 AM ISTUpdated : Apr 12, 2022, 10:40 AM IST
எக்ஸ்பிரஸ் ரயில் பயங்கர மோதல்... 5 பேர் உடல்சிதறி பரிதாபமாக உயிரிழப்பு..!

சுருக்கம்

வேக வேகமாக இறங்கிய பயணிகளில் சிலர் அருகில் இருந்த தண்டவாளத்தை கடக்க முயன்றனர். இரவு நேரம் என்பதால் எதிரே வந்த கோனார்க் எக்ஸ்பிரஸ் ரயில் வந்ததை பயணிகள் கவனிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், எதிரே வந்த கோனார்க் எக்ஸ்பிரஸ் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றவர்கள் மீது பயங்கரமாக மோதியது. 5 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். 

ஸ்ரீகாகுளம் அருகே கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து இறங்க முயன்ற பயணிகள் மீது எதிரே வந்த கோனார்க் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். 

அபாய சங்கிலி

ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம் அருகே சிங்கிடம் ஸ்ரீபுரபள்ளி இடையே ரயில் நிலையம் அமைக்கப்படவில்லை. இதனால், கோயம்புத்தூர் - சில்சார் வாராந்திர அதிவிரைவு ரயிலில் வரும் பயணிகள் சிலர் அப்பகுதியில் இறங்குவதற்காக அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தி செல்வது வாடிக்கையாக இருந்து வருகிறது. 

ரயில் மோதல்

இந்நிலையில், நேற்றிரவு இதுபோல் சிங்கிடம் ஸ்ரீபுரபள்ளி இடையே பயணிகள் சிலர் ரயிலில் அபாய சங்கிலியை இழுத்து நிறுத்தி கிராமங்களுக்கு செல்ல முயன்றனர். அப்போது, வேக வேகமாக இறங்கிய பயணிகளில் சிலர் அருகில் இருந்த தண்டவாளத்தை கடக்க முயன்றனர். இரவு நேரம் என்பதால் எதிரே வந்த கோனார்க் எக்ஸ்பிரஸ் ரயில் வந்ததை பயணிகள் கவனிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், எதிரே வந்த கோனார்க் எக்ஸ்பிரஸ் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றவர்கள் மீது பயங்கரமாக மோதியது. 5 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். 

போலீஸ் விசாரணை

இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த ரயில்வே போலீசார் விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்,  விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

மீண்டும் தாக்குதல் நடத்தினால் கடுமையான பதிலடி.. பாக். முப்படை தளபதி அசிம் முனீர் பம்மாத்து!
இண்டிகோ விமான சேவை சீராகிவிட்டது! 5% விமானங்களுக்கு செக் வைத்த மத்திய அரசு!