AP Exit Poll 2024 : இந்தியா முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதி முதல் நடைபெற்று வந்த 7 கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்றோடு முடிவடைந்துள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்பு வெளியாகியுள்ளது.
அடுத்த பிரதமர் யார் என்பதை தேர்வு செய்வதற்கான மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று ஜூன் 1ம் தேதியோடு நிறைவடைந்துள்ளது. ஏற்கனவே ஆறு கட்டமாக கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி தொடங்கி நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்ட தொகுதிகளில் இந்த வாக்குப்பதிவு நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்பொழுது வெளியாகி உள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளின்படி பிரதமர் மோடி தலைமையிலான என்டிஏ கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமர் மோடி அவர்களே ஆட்சியமைப்பார் என்று கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது. இந்த சூழலில் ஆந்திர பிரதேசத்தில் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு குறித்த கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது.
undefined
அதன்படி சந்திரபாபு நாயுடு தலைமையிலான என்டிஏ கூட்டணி 175 இடங்களில் சுமார் 160 இடங்களை பிடித்து 88 சதவீத பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் கூறுகின்றன. ஏற்கனவே ஆந்திர பிரதேசத்தில் ஆட்சியில் இருக்கும் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் குறைந்த அளவிலான இடங்களையே பெரும் இன்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளது.
ஜன்கி பாத்தின் தேசிய அளவிலான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள். pic.twitter.com/gLzpYXKk8p
— Asianetnews Tamil (@AsianetNewsTM)கடந்த மே மாதம் 13-ஆம் தேதி ஒரே கட்டமாக ஆந்திர பிரதேசத்தில் தேர்தல் நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது. ஆந்திரப் பிரதேசத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஒய்எஸ்ஆர்சிபி (யுவஜன ஸ்ராமிகா விவசாயி காங்கிரஸ் கட்சி), தெலுங்குதேசம் கட்சி, ஜனசேனா ஆகிய கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது.
RISEன் கருத்துக்கணிப்பின்படி, ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள 175 சட்டமன்றத் தொகுதிகளில் 92 முதல் 102 தொகுதிகளில் TDP+ வெற்றிபெற வாய்ப்புள்ளது. மறுபுறம் YSCRCPக்கு 48 முதல் 60 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.
ஜன்கி பாத்தின் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக கணிப்பு!! pic.twitter.com/9mOBWu0y91
— Asianetnews Tamil (@AsianetNewsTM)ஆந்திரப் பிரதேசத்தில் மொத்தம் 175 இடங்கள் உள்ளன நிலையில், பீப்பிள்ஸ் பல்ஸ் மற்றும் TV5 தெலுங்கு ஆகியவற்றின் கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் TDP+ க்கு பெரும்பான்மை கிடைக்கும் என்று கணித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜகவுக்கு அறுதி பெரும்பான்மை! இந்தியா கூட்டணிக்கு ஏமாற்றம்! எக்ஸிட் போல் 2024 சொல்வது என்ன?