லாரி - வேன் நேருக்கு நேர் மோதல்... 7 பேர் உயிரிழப்பு..!

Published : Apr 12, 2019, 03:13 PM IST
லாரி - வேன் நேருக்கு நேர் மோதல்... 7 பேர் உயிரிழப்பு..!

சுருக்கம்

ஆந்திராவில் லாரியும் மினி பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 8 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆந்திராவில் லாரியும் மினி பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 8 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் காத்ரி நகரை நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு மினி பேருந்து சென்றுக்கொண்டிருந்தது. தேசிய நெடுஞ்சாலையில் தனகல்லு என்ற இடத்தின் அருகே வந்தபோது எதிரே வந்த லாரியுடன் மினி பேருந்து நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 7 பேர் உயிரிழந்தனர். கதெபள்ளி தஸ்தாகிரி (வயது 50), காதர் பாஷா(வயது 45), சிவா நாகேஷ் (வயது 30), தெரங்குல பார்வதிமா (வயது 42), பெடபள்ளி முன்னா (வயது 50) ஆகியோர் உயிரிழந்துள்ளனர். 

விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் காயமடைந்த 8-க்கும் மேற்பட்டோரை மீட்பு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைவனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் உயிரிழந்த 7 பேர் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைவனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பியோடிய வேன் மற்றும் லாரி ஓட்டுனர்கள் போலீசார் தேடி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

ஆன்லைனில் வாக்கி-டாக்கி விற்பனை.. பிளிப்கார்ட், மீஷோ உள்ளிட்ட 8 நிறுவனங்களுக்கு விழுந்த அடி!
350 ஹை-டெக் AI கேமரா.. பெங்களூரு மைதானத்தில் ரோபோ கண்காணிப்பு.. ஆர்சிபி ரசிகர்கள் குஷி!