மாற்று திறனாளிகள், முதியோர் ஓய்வூதியத்தை வாரி வழங்கிய ஆந்திரா முதல்வர்; பயனாளி வீட்டிற்கே சென்று வழங்கினார்

By Velmurugan s  |  First Published Jul 1, 2024, 11:29 AM IST

தேர்தல் வாக்குறுதியின் படி ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு தாம் அறிவித்தபடி உயர்த்தபபட்ட ஓய்வூதியத் தொகையை இன்று மக்களுக்கு வழங்கினார்.


ஆந்திராவில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது என் டி ஏ கூட்டணி கட்சிகள் தங்களுடைய தேர்தல் வாக்குறுதியில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், விதவைகள், நீண்ட கால வியாதிகளால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட பிரிவினருக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் அதிகரிக்கப்படும் என்று கூறியிருந்தன.

 இதனைத் தொடர்ந்து ஆட்சி மாற்றத்திற்கு பின் இன்று ஆந்திரா முழுவதும் தேர்தல் வாக்குறுதியின் படி அதிகரிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்கப்பட்டது. அதன்படி இதற்கு முன் கடந்த ஆட்சியின் போது அனைவருக்கும் பொதுவாக 3 ஆயிரம் ரூபாய் மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்பட்ட நிலையில் மூத்த குடிமக்கள், விதவைகள் ஆகியோருக்கான ஓய்வூதியம் நான்காயிரம் ரூபாயாகவும், பகுதி அளவு பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் 6 ஆயிரம் ரூபாயாகவும், முழுவதுமாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர ஓய்வு ஊதியம் 10 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

Latest Videos

undefined

பழனி மலை அடிவாரத்தில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள், கடைகள் இடித்து அகற்றம்; போலீஸ் குவிப்பு

இதே போன்று நீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியம் 10 ஆயிரம் ரூபாயாகவும், டயாலிசிஸ் செய்து கொள்ளும் நோயாளிகளுக்கான மாதாந்திர ஓய்வூதியம் 10 ஆயிரம் ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டு இன்று முதல் வழங்கப்படுகிறது.

NEET UG re-exam results: கருணை மதிப்பெண் விவகாரம்; நீட் மறுத்தேர்வு  முடிவுகள் வெளியீடு

என் டி ஆர் பரோசா  என்ற பெயரில் வழங்கப்படும் அதிகரிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை முதல்வர் சந்திரபாபு நாயுடு மங்களகிரி அருகே உள்ள பெனுமாக்க கிராமத்தில் துவக்கி வைத்து பயனாளிகளுக்கு ஓய்வூதியம் வழங்கினார். தேர்தல் வாக்குறுதியின் படி இதுவரை 3 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் பெற்றவர்களுக்கு கடந்த மூன்று மாத கால அதிகரிக்கப்பட்ட பாக்கி தொகை மாதம் ஒன்றிற்கு ஆயிரம் ரூபாய் என்று முடிவு செய்து இம்மாத ஓய்வூதியம் 4000 ரூபாயுடன் மூன்றாயிரம் ரூபாயும் சேர்த்து தலா 7 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

click me!