இலங்கையில் தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுத்த முதுபெரும் தலைவராகவும் திகழ்ந்து வந்த இர.சம்பந்தன் வயது மூப்பு காரணமாக காலமானார். அவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இரா.சம்பந்தன் காலமானார்
இலங்கையில் தமிழர்களின் உரிமைக்காக தொடர் போராட்டங்களை நடத்தி உரிமைக்குரல் கொடுத்தவர் இரா.சம்பந்தன், இவர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக 50 ஆண்டுகளுக்கும் மேல் பொறுப்பு வகித்துள்ளார். தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவருமாக இரா.சம்பந்தன் இருந்துள்ளார். மேலும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில மாதங்களாக வயது மூப்பு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்தது. இந்தநிலையில் நள்ளிரவு அவர் காலமானார் (வயது 91). இலங்கையில் மிகவும் அரசியல் அனுபவம் வாய்ந்த தமிழ்த் தலைவர்களில் இரா. சம்பாந்தன் முக்கியமானவர்.
பிரதமர் மோடி இரங்கல்
திருகோணமலை மாவட்டத்தின் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினராக இருந்த சம்பந்தன் 1977 ஆம் ஆண்டு முதல் ஐந்து பாராளுமன்றங்களில் பதவி வகித்துள்ளார். இவரது மறைவிற்கு இந்திய பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூத்த தலைவர் ஆர்.சம்பந்தனின் மறைவிற்கு அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள் என கூறியுள்ளார். மேலும் இரா.சம்பந்தனுடன் சந்திப்புகளின் இனிய நினைவுகளை எப்போதும் நினைவில் இருக்கும் என தெரிவித்துள்ளார். இலங்கையில் தமிழர்களுக்கான அமைதி, பாதுகாப்பு, சமத்துவம், நீதி ஆகியவற்றுக்காக இரா.சம்பந்தன் போராடினார் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
My deepest condolences to the family and friends of veteran TNA leader R. Sampanthan. Will always cherish fond memories of meetings with him. He relentlessly pursued a life of peace, security, equality, justice and dignity for the Tamil nationals of Sri Lanka. He will be deeply… pic.twitter.com/vMLPFaofyK
— Narendra Modi (@narendramodi)
அரசியல் தலைவர்கள் அஞ்சலி
இதே போன்று சம்பந்தன் மறைவிற்கு, இலங்கை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.