ஆந்திராவில் 450 கோடி ரூபாய் செலவில் கிராமங்களில் 10,960 டிஜிட்டல் நூலகங்கள் நிறுவ திட்டம்!!

Published : Mar 29, 2023, 11:23 AM IST
ஆந்திராவில் 450 கோடி ரூபாய் செலவில் கிராமங்களில் 10,960 டிஜிட்டல் நூலகங்கள் நிறுவ திட்டம்!!

சுருக்கம்

ஆந்திரப் பிரதேச அரசு ஏழைகள் கல்வி கற்பதற்காக 450 கோடி ரூபாய் செலவில் 10,960 டிஜிட்டல் நூலகங்களை கிராமங்களில் நிறுவ திட்டமிட்டுள்ளது.

மாநில நூலகத் துறை அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டத்தில் ஆந்திரப் பிரதேச கிராந்தலயா (நூலகம்) பரிஷத் தலைவர் எம் மண்டபதி சேஷகிரி ராவ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

"கடப்பாவில் முதல் டிஜிட்டல் நூலகம் நிறுவப்பட்டது. இந்த முயற்சி அனைத்து கிராமங்களிலும் நூலகங்களை வலுப்படுத்தி, கிராமத்தில் இருப்பவர்களுக்கும் நூலக அறிவை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது" என்று ராவ் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க..Group 4 Cut off : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவு ரிலீஸ் - கட் ஆஃப் மார்க் எவ்வளவு தெரியுமா? முழு விபரம்

கூட்டத்தில், ஏழைகளுக்கு கல்வி மற்றும் அறிவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு புதிய புத்தகங்கள் வாங்குவது மற்றும் டிஜிட்டல் நூலகங்களை அமைப்பதற்கான பட்ஜெட் திட்டங்கள் குறித்து ராவ் ஆலோசித்ததாகத் தெரிகிறது. இதற்காக கல்வித்துறையில் சில சீர்திருத்தங்கல் செய்யப்பட்டுள்ளது என்று ராவ் தெரிவித்துள்ளார்.  

ராவ் கூறுகையில், 2021-22 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்க ஒதுக்கப்பட்ட ரூ.16 கோடி நிதியில் ரூ.10 கோடி மதிப்புள்ள புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. முந்தைய அரசுகள் நூலகங்களை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டன என்றும் ராவ் குற்றம்சாட்டியுள்ளார்.  மாநிலத்தில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் ஏப்ரல் 5 முதல் 'விஷனரி ஜெகன்' என்ற பெயரில் கருத்தரங்குகள் நடத்தப்படுகிறது.

இதையும் படிங்க..ஏப்ரல் மாதத்தில் வங்கிகளுக்கு 15 நாட்கள் விடுமுறை - முழு விபரம் இதோ

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

காசி தமிழ் சங்கமம் 4.0: தமிழக விவசாயிகளுக்கு வாரணாசியில் பிரமாண்ட வரவேற்பு
வந்தே மாதரம் சத்தத்தைக் கேட்டு காங்கிரஸ் ஏன் பயந்தது? நாடாளுமன்றத்தில் வரலாற்றை தோலுரித்த மோடி