வேகமெடுக்கும் கொரோனா..! ஒரே நாளில் 2,151 பேருக்கு பாதிப்பு... அலெர்ட் செய்யும் மத்திய அரசு

By Ajmal Khan  |  First Published Mar 29, 2023, 11:01 AM IST

கொரோனா பாதிப்பு மீண்டும் இந்தியாவில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 2151 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
 


கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

கொரோனா பாதிப்பால் மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கையை இழந்தும், உறவினர்கள் மற்றும் நண்பர்களை பலி கொடுத்தும் வேதனையில் தவித்து வந்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பொதுமக்கள் தற்போது தான் மீண்டும் இயல்பு வாழ்க்கையை தொடங்கியுள்ளனர். இந்தநிலையில் மீண்டும், மீண்டும் புது வகையான வைரஸ் காய்ச்சல் பொதுமக்கள் தாக்கி அச்சத்தை ஏற்படுத்தியது. இந்தநிலையில் கொரோனா பாதிப்பு நாடு முழுவதும் 100க்கும் கீழ் குறைந்து இருந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2151 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக தற்போது வரை 11ஆயிரத்து 903 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Latest Videos

undefined

தரமற்ற, போலியான மருந்துகளைத் தயாரித்த 18 நிறுவனங்களின் உரிமம் ரத்து!

தமிழகத்தில் 105 பேருக்கு கொரோனா

தமிழகத்தை பொறுத்தவரை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 100ஐ கடந்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் தமிழகத்தில் 3,000 பேரிடம் மேற்கொண்ட பரிசோதனையில் வெளிநாட்டில் இருந்த வந்த இருவர் உட்பட மொத்தம் 105 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.  தற்போது 660 பேர் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னை, கோவை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. ஒரு சில மாவட்டங்களில் பாதிப்பு பூஜ்யமாக பதிவாகியுள்ளது.

அலெர்ட் செய்யும் மத்திய அரசு

தமிழ்நாடு, கேரளா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மத்திய அரசு அலெர்ட் செய்துள்ளது. தேவையான மருந்துகள் மற்றும் படுக்கை வசதிகளை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள ஆஸ்பத்திரிகளில் கொரோனா பரவலை எதிர்கொள்ளும் விதத்தில் ஆஸ்பத்திரிகளின் தயார் நிலையை சோதித்து அறிய வருகிற 10 மற்றும் 11-ந்தேதிகளில் ஒத்திகை நடத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்

அதிகளவில் ஸ்டீராய்டு ஊசி! செயலிழந்த இரண்டு கிட்னி! சென்னையில் ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த ஜிம் பயிற்சியாளர்

click me!