வாஜ்பாயிடம் பாடம் படிக்கும் அமுல் சிறுமி! அட்டகாசமாய் ஒரு கார்ட்டூன்

By sathish kFirst Published Aug 18, 2018, 8:06 AM IST
Highlights

பிரபல பால் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான அமுல் நிறுவனம், மறைந்த இரும்பு மனிதர் வாஜ்பாயைக் கௌரவிக்கும் வகையில் அழகான கார்ட்டூன் வெளியிட்டுள்ளது.

பிரபல பால் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான அமுல் நிறுவனம், மறைந்த இரும்பு மனிதர் வாஜ்பாயைக் கௌரவிக்கும் வகையில் அழகான கார்ட்டூன் வெளியிட்டுள்ளது.

தன் வாழ்வையே நாட்டுக்காக, கோடானு கோடி மக்களுக்காக அர்ப்பணித்து, தனக்கென்று ஒரு இல்லற வாழ்வை அமைத்துக்கொள்ளாத உத்தமத் தியாகியும்,  அரசியல் தலைவரும், சுதந்திரப் போராட்டத் தியாகியும், முன்னாள் பிரதமருமான அடல் பிகாரி வாஜ்பாய்  உடல்நலக் குறைவால் நேற்று முன்தினம்  காலமானார். 

அவருக்கு வயது 93. உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஜூன் மாதம் 11 ஆம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

வாஜ்பாய் காலமானதையடுத்து, அவரது உடல் கிருஷ்ண மேனன் சாலையில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு அரசியல் கட்சி பிரமுகர்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். 

இதைத் தொடர்ந்து நேற்று  காலை 9.30 மணிக்கு வாஜ்பாய் உடல் டெல்லியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. உலகத்தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர்.  நேற்று  ஸ்மிருதி ஸ்தலில்  ராணுவ இசை, வேத மந்திரங்கள் முழங்க தரைப்படை, விமானப்படை, கடற்படை என முப்படை வீரர்கள் இறுதி மரியாதை செலுத்தினார். அவரது உடலை தகன மேடைக்கு கொண்டுவரப்பட்டு  தீ மூட்டப்பட்டது. 21 குண்டுகள் முழங்க வாஜ்பாய் உடலுக்கு ராணுவ மரியாதை செலுத்தப்பட்டு உடல் தகனம் செய்யப்பட்டது.

Topical: Tribute to the great former Prime Minister... pic.twitter.com/BRgBCFaopr

— Amul.coop (@Amul_Coop)

 இந்நிலையில், பிரபல பால் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான அமுல் நிறுவனம், மறைந்த இரும்பு மனிதர் வாஜ்பாயைக் கௌரவிக்கும் வகையில் அழகான கார்ட்டூன் வெளியிட்டுள்ளது. இதில் அமுல் சிறுமி வாஜ்பாயிடம் பாடம் படிப்பது போல மிக அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளது. வாரம் ஒருமுறை நாட்டில் நிகழும் தினசரி நிகழ்வுகளை மையப்படுத்தி கார்ட்டூன்களை  வெளியிட்டு வருகிறது அமுல் நிறுவனம். தற்போது மாமனிதர் வாஜ்பாய்யை கவுரவிக்கும் ஒரு கார்ட்டூன் வெளியிட்டுள்ளது.

click me!