
சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) பிரபலப்படுத்தும் நோக்கில் பிரபல இந்தி நடிகர் அமிதாப் பச்சனை விளம்பர தூதராக மத்திய உற்பத்தி மற்றும் சுங்க வரி வாரியம் நியமித்துள்ளது.
ஜிஎஸ்டி குறித்த 40 விநாடி வீடியோ காட்சியில் நடிகர் அமிதாப் நடித்துள்ளார். அனைத்து மாநிலங்களுக்கும் அந்த வீடியேவை மத்தியஅரசு விநியோகித்துள்ளது.
ஜிஎஸ்டி தொடர்பான வீடியோவில் இந்த வரி விதிப்பு முறை குறித்து அமிதாப் விளக்குகிறார். மூன்று வண்ணங்களைக் கொண்ட தேசிய கொடியை போன்று ஒருங்கிணைந்த தன்மை கொண்டது ஜி.எஸ்.டி. வரி. அதாவது "ஒரே தேசம், ஒரே வரி விதிப்பு, ஒரே சந்தை" என்று அவர் விளக்கம் அளிக்குமாறு வீடியோவில் உள்ளது.
இதற்கு முன்பு ஜிஎஸ்டி-யின் விளம்பர தூதராக பிரபல பாட்மிண்டன் நட்சத்திர வீராங்கனை பிவி சிந்து இருந்தார்.
2014 ஆண் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு வரி நிர்வாகத்தில் மேற்கொள்ளப்படும் மிகப் பெரிய முக்கியமான பொருளாதார சீர்திருத்தம் இதுவாகும். இதை அமல்படுத்துவதால் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 2 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
"ஒரு தேசம் ஒரே வரி விதிப்பு,ஒரே சந்தை" என்ற நோக்கத்தை உணர்த்தும் வகையில் ஜிஎஸ்டி அமல்படுத் தப்படுவதாக நிதி அமைச்சகம் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.