10 ஆண்டுகளுக்கு பின் பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சி...முதல்வராகிறார் கேப்டன் அமரிந்தர் சிங்

 
Published : Mar 11, 2017, 10:09 PM ISTUpdated : Sep 19, 2018, 02:10 AM IST
10 ஆண்டுகளுக்கு பின் பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சி...முதல்வராகிறார் கேப்டன் அமரிந்தர் சிங்

சுருக்கம்

Amerinder singh CM

10 ஆண்டுகளுக்கு பின் பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சி...முதல்வராகிறார் கேப்டன் அமரிந்தர் சிங்

பஞ்சாப் மாநிலத்தில் 10 ஆண்டுகளுக்கு பின் ஆட்சியைக் கைப்பற்றியது கேப்டன் அமரிந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் கட்சி. மொத்தமுள்ள 117 தொகுதிகளில் 77 இடங்களைக் கைப்பற்றி தனிப் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கிறது.

சட்டப்பேரவைத் தேர்தல்

பஞ்சாப் மாநிலத்தில் 15-வது சட்டசபைக்கான தேர்தல் கடந்த மாதம் 4 ந் தேதி நடைபெற்றது. மொத்த உள்ள 117 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடந்த தேர்தலில் 78.6 சதவீதம் வாக்குகள் பதிவானது.

இந்த தேர்தலில் மாநிலத்தில் நான்கு முனைப் போட்டி நிலவியது. ஆளும் அகாலிதளம், பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ் கட்சியும், ஆம் ஆத்மி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சிகள் களம் கண்டன.

போராட்டம்

கடந்த 10 ஆண்டுகளாக  ஆட்சியில் இருந்த சிரோமணி அகாலிதளம், பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சியைத் தக்க வைக்க களத்தில் இறங்கிய நிலையில், அந்த கூட்டணியை அகற்றிவிட்டு மீண்டும் ஆட்சியைப் பிடிக்க கேப்டன் அமரிந்தர் தலைமையிலான காங்கிரஸ் கட்சி கடுமையாக போராடியது.

பிரச்சினைகள்

மாநிலத்தில் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் குடும்பத்தினரின் தலையீடுகள், போதை மருந்து கடத்தல்கள், இளைஞர்களிடையே புழக்கம், சட்டம் ஒழுங்கு, நிர்வாக சீர்கேடு, ஊழல் ஆகியவற்றை காரணம் காட்டி காங்கிரஸ் கட்சி தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டது. 

சித்து

இதில் சமீபத்தில் பாரதியஜனதா கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த முன்னால் கிரிக்கெட் வீரர் சித்துவும் தீவிரமாக பிரசாரம் செய்தார்.

ஆம்ஆத்மி

முதல்முறையாக பஞ்சாப்பில் களம் கண்ட ஆம் ஆத்மி கட்சியும், அதன் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலும் ஆளும் அகாலி தளம், பாரதியஜனதா கூட்டணியையும், காங்கிரஸ் கட்சியையும் விமர்சித்தும் பிரசாரம் செய்தது.

காங்கிரஸ் வெற்றி

கடந்த மாதம் 4-ந்தேதி தேர்தல் முடிந்த நிலையில், நேற்று வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியை இழந்து இருந்த காங்கிரஸ் கட்சி 77 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.

படுதோல்வி

அதேசமயம், பாரதிஜனதா கட்சியுடன் சேர்ந்து கூட்டணி அமைத்து கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்த சிரோமணி அகாலிதளம் கட்சியின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. இந்த கூட்டணி மொத்தம் 18 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. இதில் பாரதியஜனதா கட்சி 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று, 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆளும் கட்சியில் இருந்த 10 அமைச்சர்கள், இதில் இருவர் பாரதியஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள் தோல்வி அடைந்தனர்.

எதிர்க்கட்சி

டெல்லியை விட்டு வெளியே சென்று முதல்முறையாக பஞ்சாப்பில் போட்டியிட்ட அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி 20 இடங்களைக் கைப்பற்றி, எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது.


காங்கிரஸ் தலைவர்  கேப்டன் அமரிந்தர் சிங் லம்பி தொகுதியில் தோல்வி அடைந்தாலும், பாட்டியாலா தொகுதியில் வெற்றி பெற்றார். லம்பி தொகுதியில் முதல்வர் பிரகாஷ்சிங் பாதல் வெற்றி பெற்றார். பிரகாஷ் பாதல் மகனும், அகாலிதளம் தலைவருமான சுக்பீர் சிங் பாதல் 18,500 வாக்குகள் வித்தியாசத்தில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் பகவாந்த் மானைத் தோற்கடித்தார். 

தோல்வி அடைந்தவர்கள்

ஆம் ஆத்மி கட்சியைப் பொருத்தவரை சுக்பால் சிங் கைரா, எச்.எஸ். பூல்கா, கான்வர் சாந்து உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர். காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல்வரான ராஜிந்தர் கவுர் பாட்டல், சுனில் ஜாக்கர்(காங்), லூதியானா எம்.பி. ரவ்நீத் சிங் பிட்டு, பஞ்சாப் அமைச்சர்கள் ஆதியஸ் பிரதாப் சிங் கைரான், டோடா சிங், சிக்கந்தர் சிங் மலுகா, முன்னாள் ராணுவ தலைவர் ஜே.ஜே.சிங் ஆகியோர் தோல்வி அடைந்தனர். 

சதவீதம்

மாநிலத்தில் நடந்த தேர்தலில் 38.5 சதவீதம் வாக்குகளை காங்கிரஸ் கட்சியும், ஆம் ஆத்மி கட்சி 23.8 சதவீதத்தையும், அகாலிதளம் கட்சி 25.3 சதவீதத்தையும், பாரதியஜனதா கட்சி 5.3 சதவீத வாக்குகளையும் பெற்றன. 

மக்களுக்கு நன்றி

இந்த தேர்தல் முடிவு குறித்து, முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் கூறுகையில், “ பஞ்சாப் மாநிலத்துக்கு சேவை செய்ய எனக்கு  வாய்ப்பளித்த மக்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.  நான் செய்த பணிகளை நினைத்து திருப்தி அடைகிறேன். ஏதேனும் தவறு செய்து இருந்தால் அதற்கு மன்னிப்பு கோருகிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.

 

PREV
click me!

Recommended Stories

மாப்ள.. நான் வந்துட்டேன்! 12,800 கி.மீ. தாண்டி வந்து நண்பனை மிரள விட்ட NRI இளைஞர்!
வங்கதேசம் மீது கை வைத்தால் ஏவுகணைகள் பாயும்! இந்தியாவுக்கு பாகிஸ்தான் மிரட்டல்!