
100 ஓட்டுகளுக்கும் குறைவாகப் பெற்ற 100க்கு மேலான வேட்பாளர்கள்…5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் அதிசயம்
5 மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தலில் 100-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள், 100 வாக்குகளுக்கு குறைவாகப் பெற்று தோல்வி அடைந்துள்ளனர்.
குறிப்பாக மணிப்பூரில் இரும்பு மங்கை இரோம் சர்மிளா 90 வாக்குகளே பெற்று தோல்வி அடைந்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தின் முசாபர் நகர், வடக்கு அலகாபாத் ஆகியவற்றில் பல தொகுதிகளிலும், உத்தரகாண்ட் மாநிலத்தின் ராஜ்பூர் மற்றும் பஞ்சாப்பின் குரு ஹர் சாகல் ஆகியவற்றிலும் வேட்பாளர்கள் பலர் 100 வாக்குகளுக்கு குறைவாக பெற்று தோற்றனர்.
சிறுகட்சிகள் மட்டுமல்லாது, சுயேட்சை வேட்பாளர்களும், பிரபலமான கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களும் கூட 100-க்கும் குறைவான வாக்குகளையே பெற்று தோல்வி கண்டனர். இவர்களோடு ஒப்பிடும் போது, நோட்டாவுக்கு கிடைத்த வாக்குகள் மிக அதிகமாகும்.
மணிப்பூரில் போட்டியிட்ட வேட்பாளர்களில் 20 சதவீதம் பேர், 100-க்கும் குறைவான வாக்குகளைப் பெற்று தோல்வி கண்டனர். உத்தரப்பிரதேசத்தில் ஒரு சதவீத வேட்பாளர்களும், பஞ்சாபில் 2சதவீதம் பேரும், கோவாவில் 10 சதவீத வேட்பாளர்கலும் 100-க்கும் குறைவானவாக்குகள் பெற்றனர். மணிப்பூர் மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஒருவர் 100-க்கும் குறைவான வாக்குகளைப் பெற்று தோல்வி அடைந்தார். உத்தரகாண்ட் மாநிலத்தில் 32 வேட்பாளர்கள் 100-க்கும் குறைவான வாக்குகளைப் பெற்றனர்.
கோவாவில் டபோலிம், பனாஜி, செயின்ட் அன்ட்ரே,சான்டாகுருஸ், வாஸ்கோட காமா உள்ளிட்ட தொகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் 100-க்கும் குறைவான வாக்குகளைப் பெற்று தோல்வி கண்டனர்.