ஒரு மாதத்தில் போதை மருந்து பிரச்சினையை விசாரிப்போம்….கேப்டன் அமரிந்தர் சிங் பேட்டி

Asianet News Tamil  
Published : Mar 11, 2017, 09:19 PM ISTUpdated : Sep 19, 2018, 02:10 AM IST
ஒரு மாதத்தில் போதை மருந்து பிரச்சினையை விசாரிப்போம்….கேப்டன் அமரிந்தர் சிங் பேட்டி

சுருக்கம்

Amerinder Singh press meet

ஒரு மாதத்தில் போதை மருந்து பிரச்சினையை விசாரிப்போம்….கேப்டன் அமரிந்தர் சிங் பேட்டி

மாநிலத்தில் முக்கிய பிரச்சினையாக இருக்கும் போதைமருந்து பிரச்சினையை 4 வாரத்துக்குள் கையில் எடுத்து விசாரிப்போம் என்று காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கேப்டன் அமரிந்தர் சிங் நேற்று தெரிவித்தார்.

பஞ்சாபில் கடந்த 10 ஆண்டுகளுக்கு பின் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்த வெற்றி குறித்து காங்கிரஸ் தலைவர் கேப்டன் அமரிந்தர் சிங் சண்டிகரில்நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது-

போதைமருந்து

மாநிலத்தில் முக்கியப் பிரச்சினையாக இருக்கும் போது மருந்து விவகாரத்தில் யாருக்கு எல்லாம் தொடர்பு இருக்கிறதோ, எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்படுவார்கள். இந்த பிரச்சினையை அடுத்த 4 வாரங்களுக்குள் கையில் எடுப்போம்.

முன்னுரிமை

மாநிலத்தில், புனித சின்னங்கள், மதிப்புமிகுந்த விசயங்களை அவமானப்படுத்தும் சம்பவங்கள் குறித்தும் விசாரணை செய்யப்படும். சிறந்த நிர்வாகம், மக்களுக்கு சுகாதார வசதி, தரமான கல்வி அளித்தல் முன்னுரிமையாக இருக்கும் என்றார்.

துணைமுதல்வர்?

சித்துவுக்கு துணைமுதல்வர் பதவி கொடுக்கப்படுமா என்ற கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில், “ இந்த முடிவை கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தியும், தலைவர் சோனியா காந்தியும் எடுப்பார்கள். நாங்கள் பரிந்துரை செய்வோம், ஆனால், இறுதி முடிவு கட்சித்தலைமை எடுக்கும்.  சிரோன்மணி அகாலிதளம்,பாரதிய ஜனதா கூட்டணியும் பஞ்சாப்பை காலில் போட்டு மிதித்து, அழித்துவிட்டன.

மத்தியஅரசு உதவி

பஞ்சாப் மாநிலத்துக்கு வேலைவாய்ப்பு, சிறந்தகல்வி, சுகாதார வசதி, வளர்ச்சி ஆகியவை தேவை.  எங்களின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு எங்களுக்கு உதவும் என நம்புகிறோம். தேர்தல் நேரத்தில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முழுமையாக உழைப்போம்.

கெஜ்ரிவால் யார்?

தலைமையே இல்லாத ஆம் ஆத்மி கட்சியை மக்கள் தேர்வு செய்யாததற்கு நான் வாழ்த்த்துத் தெரிவிக்கிறேன். அரவிந்த் கெஜ்ரிவால், பருவகாலத்தில் வரும் புயலைப் போன்றவர். வருவார், பின் சென்றுவிடுவார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

 

PREV
click me!

Recommended Stories

பங்களாதேஷில் மீண்டும் ஒரு இந்து சுட்டுக்கொலை! 3 வாரத்தில் 5-வது பலி!
வாயில்லா ஜீவனை இப்படியா பண்றது? நாயை மது குடிக்க வைத்து வீடியோ வெளியிட்ட இளைஞர் கைது!