சுழற்றி அடிக்கும் ஒமைக்ரான்... இனி ஆன்லைனில் தான் நீதிமன்றங்கள் செயல்படும்... அதிரடி அறிவிப்பு!!

By Narendran SFirst Published Jan 16, 2022, 3:46 PM IST
Highlights

கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் எதிரொலியாக கேரளாவில் அனைத்து நீதிமன்றங்களும் நாளை முதல் ஆன்லைனில் செயல்படும் என கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் எதிரொலியாக கேரளாவில் அனைத்து நீதிமன்றங்களும் நாளை முதல் ஆன்லைனில் செயல்படும் என கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2 லட்சத்து 68 ஆயிரத்து 833 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 3 கோடியே 68 லட்சத்து 50 ஆயிரத்து 962 ஆக அதிகரித்துள்ளது. நாள்தோறும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், பாசிட்டிவ் 16.66 சதவீதமாகவும், வாராந்திர பாசிட்டிவ் 12.84 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. 223 நாட்களில் இல்லாத அளவாக கரோனாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 14 லட்சத்து 17 ஆயிரத்து 820 ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த பாதிப்பில் 3.85 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர். குணமடைவோர் சதவீதம் படிப்படியாகக் குறைந்து 94.83 ஆகச் சரிந்துள்ளது. கரோனாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை கூடுதலாக ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 747 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவிலிருந்து இதுவரை 3 கோடியே 49 லட்சத்து 47 ஆயிரத்து 390 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவில் கடந்த 24 மணி நேரத்தில் 402 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 85 ஆயிரத்து 752 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக கேரளாவில் 199 பேரும், டெல்லியில் 34 பேரும் உயிரிழந்துள்ளனர். ஒமைக்ரான் பரவலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 ஆயிரத்தைக் கடந்து 6,041 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் எதிரொலியாக கேரளாவில் அனைத்து நீதிமன்றங்களும் நாளை முதல் ஆன்லைனில் செயல்படும் என கேரள உயர்நீதிமன்றம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. தவிர்க்க முடியாத வழக்குகளில் மட்டுமே நேரடி விசாரணை நடைபெறும். அதிகபட்சமாக 15 பேர் மட்டுமே நீதிமன்றத்திற்குள் அனுமதிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நேற்றைய நிலவரப்படி இந்தியாவில் தினசரி பாதிப்பாக 2,68,833 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. கொரோனா பரவலை தடுக்க பல்வேறு மாநிலங்கள் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். இந்நிலையில் கேரளாவில் அனைத்து நீதிமன்றங்களும் நாளை முதல் ஆன்லைனில் செயல்படும்  என கேரள உயர்நீதிமன்றம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது. உயர் நீதிமன்றத்தின் அனைத்து அமர்வுகளும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெறும். தவிர்க்க முடியாத வழக்குகளில் மட்டுமே நேரடி விசாரணை நடைபெறும். உயர்நீதிமன்றம் பிறப்பித்த அறிவுறுத்தல்களின்படி, உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்வது தொடரும். வழக்கு தாக்கல் செய்வதற்கு மட்டுமே வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவர். பொதுமக்கள் நீதிமன்ற வளாகத்திற்குள் வருவதற்கு அனுமதி இல்லை. நேரடியான வழக்கு தொடர்பான கோப்புகளை தாக்கல் செய்வதற்கு நீதிமன்ற வளாகத்தில் தனி பெட்டி ஒன்று வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!