புதுச்சேரி நாராயணசாமிக்கு கொரோனா..!பூஸ்டர் போட்ட பிறகும் வேலைக்காட்டிய சைனா வைரஸ்..

By Thanalakshmi VFirst Published Jan 15, 2022, 10:28 PM IST
Highlights

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
 

புதுச்சேரில் மாநிலத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பின்னார் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று  5 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் 1,471 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதனிடையே, இன்று 2,344 பேருக்கு மட்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதிலும், 1213 பேர் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் கொரோனா பலி எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாஹே பிராந்தியத்தில் ஒரே நாளில் சிகிச்சை பலனின்றி இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், புதுச்சேரியில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தான் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், லேசான அறிகுறி இருந்ததால் கொரோனா பரிசோதனை செய்ததாகவும் அதில் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், வீட்டில் தனிமைப்படுத்திகொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அண்மையில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

Today I have tested positive for covid mild symptoms and I have isolated myself at home. Those who contacted me over the last few days kindly isolate yourself and get tested.

— V.Narayanasamy (@VNarayanasami)

பூஸ்டர் தடுப்பூசி போட்ட பிறகும் புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

click me!