ஒரே நாளில் இவ்வளவு எண்ணிக்கையா...? ஷாக் கொடுத்த ரிப்போர்ட்.. இந்தியாவில் மீண்டும் உச்சம் தொட்ட கொரோனா..

Published : Jan 16, 2022, 11:01 AM IST
ஒரே நாளில் இவ்வளவு எண்ணிக்கையா...? ஷாக் கொடுத்த ரிப்போர்ட்.. இந்தியாவில் மீண்டும் உச்சம் தொட்ட கொரோனா..

சுருக்கம்

உலக நாடுகளில் கொரோனா 4-வது அலை அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா 3-வது அலை பல மாநிலங்களிலும் கடும் பாதிப்பை உருவாக்கி உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 2,71,202 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பை விட 2000 அதிகம்.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,71,22,164 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 314 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,86,066 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்றில் இருந்து ஒரே நாளில் 1,38,331 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,50,85,721  ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1,550,377 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 1,56,76,15,454 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 66,21,395 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இதுவரை 6,041 ஆக இருந்த நிலையில், தற்போது 7,743 ஆக உயர்ந்துள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வ.உ.சி. கப்பலில் வந்தே மாதரம்.. பாரதியார் பாடல் பாடி அசத்திய பிரதமர் மோடி!
நவ்ஜோத் சித்துவின் மனைவி காங்கிரஸில் இருந்து அதிரடி நீக்கம்..! சர்ச்சை நாயகனின் தொடர் அட்ராசிட்டி!