என்சிபி கட்சியின் தேசியத் தலைவர் பதவியில் இருந்து சரத் பவாரை நீக்குகிறார் அஜித் பவார். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் மனுவை அளித்துள்ளார்.
தேசியவாத காங்கிரஸின் மூத்த தலைவர் அஜித் பவார் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 29 பேருடன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார். ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனா - பா.ஜ.க கூட்டணி அரசுக்கு ஆதரவு அளித்து அக்கட்சியில் இணைந்தார். மேலும் அவர், அம்மாநில துணை முதல்வராகவும் பதவியேற்றார்.
அஜித் பவாருடன் அவரது ஆதரவாளர்கள் 8 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இந்த நிலையில், என்சிபி கட்சியின் தேசியத் தலைவர் பதவியில் இருந்து தனது மாமா சரத் பவாரை நீக்கிய அஜித் பவார், தான் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளார்.
அதேபோல சரத் பவார் தரப்பில் இருந்தும் தேர்தல் ஆணையத்திற்கு மனு அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்த திருப்பங்கள் மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.