தொலை தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் நிறுவனம் குறைந்தபட்ச ரீசார்ஜின் விலையை அதிகரித்துள்ளது பயனர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தொலை தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் நிறுவனம் குறைந்தபட்ச ரீசார்ஜின் விலையை அதிகரித்துள்ளது பயனர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முன்னதாக ஏர்டெல்லின் குறைந்தபட்ச ரீசார்ஜ் திட்டம் 99 ரூபாயாக இருந்தது. இந்த திட்டத்தில் 200 எம்.பி. டேட்டாவும் அழைப்புகளுக்கு வினாடிக்கு 2.5 ரூபாயும் வழங்கப்பட்டது. இந்த நிலையில் குறைந்தபட்ச ரீசார்ஜ் திட்டத்தை 99 ரூபாயில் இருந்து 155 ரூபாயாக ஆக உயர்த்தியுள்ளது.
இதையும் படிங்க: சமாளிக்குமா பாஜக! தெற்கு குஜராத்தில் சவாலாகிய ஆம் ஆத்மி, பழங்குடியினர்: ஓர் அலசல்
இந்த திட்டத்தில் அன்லிமிடேட் அழைப்பும், 1 ஜிபி டேட்டா மற்றும் 300 எஸ்எம்எஸ்களும் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் ஹரியானா மற்றும் ஒடிசாவில் ஏர்டெல் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சோதனையின் முடிவை கொண்டு இந்தியா முழுவதும் அமல்படுத்த ஏர்டெல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஆரம்பத்தில் ஏர்டெல் நிறுவனம் அதன் குறைந்த பட்ச ரீசார்ஜ் கட்டணமாக 79 ரூபாய் இருந்தது.
இதையும் படிங்க: மங்களூர் குக்கர் குண்டு வெடிப்பு! - முக்கிய சிசிடிவி காட்சி வெளியீடு!
அப்போது 79 ரூபாயை 99 ரூபாயாக மாற்றி 2021 ஆம் ஆண்டு ஏர்டெல் நிறுவனம் சோதனை செய்து அதன் முடிவைக்கொண்டு இந்தியா முழுவதும் குறைந்த பட்ச ரீசார்ஜ் திட்டத்தை 99 ரூபாயாக மாற்றியது. தற்போது இதேபோன்ற முறையை ஏர்டெல் நிறுவனம் செயல்படுத்துவதாக கூறப்படுகிறது. ஏர்டெல்லின் இந்த செயல் அதன் பயனர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.