மகாராஷ்டிராவின் அமராவதியில் தெற்காசியாவின் மிகப்பெரிய பறக்கும் பயிற்சி மையத்தை (FTO) நிறுவ உள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
மகாராஷ்டிராவின் அமராவதியில் தெற்காசியாவின் மிகப்பெரிய பறக்கும் பயிற்சி நிறுவனத்தை (FTO) நிறுவ உள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.மகாராஷ்டிரா விமான நிலைய மேம்பாட்டு நிறுவனத்துடன் (MADC) இணைந்து இந்த திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமராவதியில் உள்ள பெலோரா விமான நிலையத்தில் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் (டிஜிசிஏ) உரிமம் பெற்ற எஃப்டிஓ 2026 நிதியாண்டின் முதல் காலாண்டில் செயல்படத் தொடங்க உள்ளது.
இது ஆண்டுதோறும் 180 வணிக விமானிகளுக்கு பட்டம் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் 3பயிற்சி நோக்கங்களுக்காக பிரத்தியேகமாக அர்ப்பணிக்கப்பட்ட 31 ஒற்றை என்ஜின் மற்றும் 3 இரட்டை என்ஜின் விமானங்களைக் கொண்டிருக்கும்.
இந்த எஃப்டிஓவை நிறுவுவதற்கும் நிர்வகிப்பதற்கும் ஏர் இந்தியா மகாராஷ்டிரா விமான நிலைய மேம்பாட்டு நிறுவனத்துடன் 30 ஆண்டு ஒப்பந்தத்தைப் பெற்றது, இது ஒரு இந்திய விமான நிறுவனத்தின் முதல் முயற்சியாகும்.
ஏர் இந்தியாவின் நிர்வாக இயக்குனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான கேம்ப்பென் வில்சன் இந்த திட்டம் குறித்து பேசிய போத், "அமராவதியில் உள்ள FTO இந்தியாவின் விமானத் தன்னம்பிக்கைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும். இளம் ஆர்வமுள்ள விமானிகளுக்கு அவர்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகளை வழங்கும். உலகத் தரம் வாய்ந்த விமான நிறுவனமாக மாறும் ஏர் இந்தியாவின் இலக்கை ஆதரிப்பதில், இந்த விமானிகள் முக்கிய பங்கு வகிப்பார்கள்.” என்று நம்பிக்கை தெரிவித்தார்
ஏர் இந்தியாவிலுள்ள ஏவியேஷன் அகாடமியின் இயக்குநர் சுனில் பாஸ்கரன், உலகத் தரத்துடன் இணைந்த உலகத்தரம் வாய்ந்த பயிற்சியை வழங்குவதில் FTO இன் பங்கை எடுத்துரைத்தார். இந்தியாவின் விமானப் போக்குவரத்து உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், தற்சார்பு இந்தியாவுக்கான அரசாங்கத்தின் பார்வைக்கு ஆதரவளிப்பதற்கும் தங்கள் அகாடமியின் உறுதிப்பாட்டை அவர் வலியுறுத்தினார்.
MADC மற்றும் Air India இடையேயான கூட்டு முயற்சியானது, விமானப் போக்குவரத்துத் துறையில் 3,000-க்கும் மேற்பட்ட புதிய வேலைகளை உருவாக்கும் என்றும், அடுத்த பத்தாண்டுகளில் மகாராஷ்டிராவின் உள்நாட்டு உற்பத்திக்கு 1,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக பங்களிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மகாராஷ்டிராவின் இளைஞர்களுக்கு விமானப் போக்குவரத்தில் சாத்தியமான வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
அமராவதியில் உள்ள FTO 10 ஏக்கர் பரப்பளவைக் கொண்டிருக்கும். இது டிஜிட்டல் முறையில் செயல்படுத்தப்பட்ட வகுப்பறைகள், நவீன தங்கும் விடுதிகள், டிஜிட்டல் மயமாக்கப்பட்ட செயல்பாட்டு மையம் மற்றும் செயல்பாட்டு திறன் மற்றும் பாதுகாப்புத் தரங்களை உறுதிப்படுத்த பிரத்யேக பராமரிப்பு வசதி போன்ற அதிநவீன வசதிகளை உள்ளடக்கியது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஏர் இந்தியா தனது பயிற்சி அகாடமிக்கான திட்டங்களை குருகிராமில் அறிவித்தது, இது 600,000 சதுர அடி பரப்பளவில் உள்ளது, இது தெற்காசியாவிலேயே மிகப்பெரிய அகாடமி என்பது கூடுதல் சிறப்பு.
1932 இல் ஜே.ஆர்.டி டாடாவால் நிறுவப்பட்ட ஏர் இந்தியா, இந்தியாவின் விமானப் போக்குவரத்து வரலாற்றில் மிகவும் முக்கியமான பங்கைக் கொண்டுள்ளது. அரசுக்கு சொந்தமான நிறுவனமாக இருந்த இவை69 ஆண்டுகளுக்குப் பிறகு, ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகியவை ஜனவரி 2022 இல் டாடா குழுமத்தில் மீண்டும் இணைந்தன. கண்டங்கள் முழுவதும் உள்ள உலக நாடுகளுடன் இந்தியாவை இணைக்கும் வகையில் உலகளாவிய விமான சேவைகளை அந்நிறுவனம் வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.