மும்பையில் இருந்து டெல்லி சென்ற ஏர் இந்தியா விமானத்தில் இருக்கையின் அருகே சிறுநீர் கழித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் விமானம் நடுவானில் இருந்தபோது, இருக்கையின் மலம் மற்றும் சிறுநீர் கழித்ததாக கைது செய்யப்பட்டார். ஜூன் 24 அன்று AIC 866 விமானத்தில் இந்த சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். ராம் சிங் என அடையாளம் காணப்பட்ட பயணி, 17F இல் அமர்ந்து, விமானத்தின் 9 வது வரிசையில் மலம் கழித்தார், சிறுநீர் கழித்தார் என்றும், எச்சில் துப்பினார் என்றும் அவர் மீது பதிவு செய்யப்பட்ட FIR-ல் குறிப்பிடப்பட்டுள்ளது. ராம் சிங்கின் தவறான நடத்தை கவனித்த விமான பணியாளர்கள், பயணிகளுக்கு வாய்மொழி எச்சரிக்கை விடுத்து மற்றவர்களிடமிருந்து அவரை தனிமைப்படுத்தினர்.
எனினும் பல பயணிகள் அவரின் நடவடிக்கையால் கோபமடைந்தனர். விமானம் தரையிறங்கியதும், குற்றம் சாட்டப்பட்ட பயணியை உள்ளூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல ஏர் இந்தியா பாதுகாப்புத் தலைவர் வந்திருந்தார். இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 294 (ஆபாசமான செயல்கள்) மற்றும் 510 (குடிபோதையில் ஒருவரால் பொது இடங்களில் தவறான நடத்தை) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ஜம்மு காஷ்மீர் என்கவுண்ட்டர்.. பயங்கரவாதி சுட்டுக்கொலை.. நள்ளிரவில் பரபரப்பு..
இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் அந்த பயணியை தற்போது கைது செய்துள்ளனர். டெல்லி காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் இதுகுறித்து பேசிய போது “ நாங்கள் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினோம், அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணை நடந்து வருகிறது" என்று தெரிவித்தார். அந்த பயணி தற்போது ஆப்பிரிக்காவில் சமையல்காரராக பணிபுரிந்து வருகிறார் என்று கூறப்படுகிறது.
ஏர் இந்தியா விமானத்தில் இதுபோன்ற சம்பவம் நடைபெறுவது இது முதன்முறையல்ல. கடந்த ஆண்டு நவம்பர் 26 –ம் தேதி, போதையில் இருந்த ஒருவர் நியூயார்க்கில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பெண் சக பயணி மீது சிறுநீர் கழித்ததாகக் கூறப்படுகிறது.
மேலும் கடந்த ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி, பாரிஸ்-புது டெல்லி ஏர் இந்தியா விமானத்தில், குடிபோதையில் ஆண் பயணி ஒருவர் பெண் பயணியின் போர்வையில் சிறுநீர் கழித்ததாகக் கூறப்படும் மற்றொரு சம்பவம் அரங்கேறியது என்பது குறிப்பிடத்தக்கது.
காலம் தவறி பெய்யும் மழை.. பருவமழை சீரற்றதாக மாற என்ன காரணம்? நிபுணர்கள் விளக்கம்..