இந்தியா உடனான உயர் தொழில்நுட்ப வர்த்தக பகிர்வு! ஏற்றுமதி கட்டுப்பாடுகளை தளர்த்த அமெரிக்கா வலியுறுத்தல்!

By Dinesh TG  |  First Published Jun 8, 2023, 9:22 AM IST

பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணத்திற்கு முன்னதாக, இந்தியா-அமெரிக்கா இரு நாடுகளுக்குமான வர்த்தக கூட்டம் (IUSSTD - India-US Strategic Trade Dialogue)அமெரிக்காவில் நடைபெற்றது.
 


அமெரிக்க பாராளுமன்ற கூட்டத்தில் உரையாற்ற வருமாறு, பிரதமர் மோடிக்கு, அமெரிக்க பாராளுமன்ற செயலகம் அழைப்பு விடுத்துள்ளது. இதனை பிரதமர் மோடியும் ஏற்றுக்கொண்டுள்ளார். அதன்பேரில், வரும் ஜூன் 22-ம் தேதி அமெரிக்க செல்லும் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பிடனை சந்தித்து இரு நாடுகளுக்கிடையேயான நட்புறவு குறித்து பேசுகிறார். பின்னர் அதிபர் அளிக்கும் விருந்திலும் பங்கேற்கிறார். தொடர்ந்து அமெரிக்க பாராளுமன்ற கூட்டு கூட்டத்தில் உரையாற்றுகிறார்.

பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணத்திற்கு முன்னதாக, இரு நாடுகளுக்குமான இந்தியா-அமெரிக்க மூலோபாய வர்த்தக கூட்டம் (IUSSTD) அமெரிக்காவில் நடைபெற்றது. அதில், செமிகண்டக்டர்கள், விண்வெளி, தொலைத்தொடர்பு, குவாண்டம், செயற்கை நுண்ணறிவு, பாதுகாப்பு மற்றும் பயோ-டெக் போன்ற முக்கியமான தொழில்நுட்பங்களில் வளர்ச்சி மற்றும் வர்த்தகத்தை எளிதாக்குவதற்கான வழிகள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது என அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

சிக்கலான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் (iCET) இந்தியா-அமெரிக்க முன்முயற்சியின் கீழ் தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை முன்னெடுப்பதற்கான முக்கிய வழிமுறையாக இந்த கூட்டம் கருதப்படுகிறது. இருதரப்பு உயர்-தொழில்நுட்ப வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப கூட்டாண்மையில் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்யும் கண்காணிப்பு குழுவை அமைக்க இந்தியாவும் அமெரிக்காவும் பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொண்டன.

இந்த கூட்டத்திற்கு, வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா இந்தியா சார்பில் கலந்துகொண்டார். அமெரிக்கத் தூதுக்குழுவுக்கு அமெரிக்க வர்த்தகத் துறையின் தொழில் மற்றும் பாதுகாப்புத் துறையின் துணைச் செயலர் ஆலன் எஸ்டீவ்ஸ் மற்றும் அமெரிக்க வெளியுறவுத் துறையின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலர் விக்டோரியா நுலாண்ட் ஆகியோர் கலந்துகொண்டனர்.

2024 தேர்தல்... கூட்டணியில் இரண்டு முக்கிய கட்சிகள்? உற்சாகத்தில் பாஜக!

பலதரப்பு ஏற்றுமதி கட்டுப்பாட்டுகள் இருக்கும் நிலையில், ஒத்துழைப்பை அவர்கள் மதிப்பாய்வு செய்து சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ள இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. ஏற்றுமதி கட்டுப்பாட்டு முறைகள் குறித்து தொழில்துறை, கல்வியாளர்கள் மற்றும் பிற பங்குதாரர்களிடையே விழிப்புணர்வை அதிகரிக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளது என இந்திய அரசு தெரிவித்துள்ளது.

Tap to resize

Latest Videos

click me!