உள்ளாடையை விலக்க தயங்காத ரஹானா, இஸ்லாத்திலிருந்து விலக்கினால் திருந்துவாரா? உக்கிரமாய் கோஷமிடும் ஐயப்ப பக்தர்கள்.

Published : Oct 21, 2018, 04:39 PM IST
உள்ளாடையை விலக்க தயங்காத ரஹானா, இஸ்லாத்திலிருந்து விலக்கினால் திருந்துவாரா? உக்கிரமாய் கோஷமிடும் ஐயப்ப பக்தர்கள்.

சுருக்கம்

பாத்திமா ரெஹானா மற்றும் அவரது குடும்பத்தினரை இஸ்லாத்திலிருந்து  தள்ளி வைத்திருக்கிறது கேரள முஸ்லீம் ஜமா அத். இதை உடனடியாக செய்திடுமாறு எர்ணாகுளம் முஸ்லீம் ஜமா அத் துக்கு கேரள முஸ்லீம் ஜமாஅத் பரிந்துரைத்திருக்கிறது. 

சபரிமலை சந்நிதானத்துக்கு செல்ல முயன்ற கேரளாவின் இஸ்லாமிய பெண் ரெஹானா பாத்திமா ‘சபரிமலையில் சந்நிதானத்தினுள் செல்ல முயன்று, இந்துக்களின் நம்பிக்கையை புண்படுத்தியதற்காக பாத்திமா ரெஹானா மற்றும் அவரது குடும்பத்தினரை இஸ்லாத்திலிருந்து  தள்ளி வைத்திருக்கிறது கேரள முஸ்லீம் ஜமா அத். இதை உடனடியாக செய்திடுமாறு எர்ணாகுளம் முஸ்லீம் ஜமா அத் துக்கு கேரள முஸ்லீம் ஜமாஅத் பரிந்துரைத்திருக்கிறது. 

இந்த தகவல் உலகெங்கிலும் உள்ள ஐயப்ப பக்தர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இதுநாள் வரை கேரளத்தில் இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் பி.ஜே.பி.யினர், ஆர்.எஸ்.எஸ்.ஸுக்கு இடையில் நடந்து வந்த மோதல் விவகாரத்தில் இது ஒரு பாசிடீவ் திருப்பு முனையாக அமைந்திருக்கிறது. 

இந்நிலையில் ரெஹானாவை இஸ்லாத்திலிருந்து விலக்கி வைத்தால் மட்டும் அவர் திருந்துவிடுவாரா என்ன? என்று இணையத்தில் விடாமல் போட்டுப் பொளக்கின்றனர்  ’ஐயப்பன் அடிமைகள்’ எனும்  குருப். 

அவர்கள் கொட்டித் தீர்த்திருக்கும் தகவலின் சாராம்சம்...

“கேட்டால் தன்னை புரட்சிக்காரி, பெண் அடிமைத்தனத்துக்கு எதிரானவள் என்று பேசிக் கொள்கிறார் ரெஹானா. தன் மார்புகளை தர்பூசணியால் மறைத்து போஸ் கொடுத்து, கணவன் ரசிக்க இணையதளத்தில் வெளியிட்டவர். ‘கிஸ் ஆஃப் லவ்’ அமைப்பை கொண்டு வந்து கூத்தடித்து கேரளத்தின் மானத்தை  சந்தி சிரிக்க வைத்தவர். 

திருச்சூரில் ஓணத்துக்குப் பின் வரும் புலிகலி நிகழ்ச்சியில் ஆண்கள் மட்டுமே புலிவேடமிடுவர். ஆனால் ரெஹானாவும் ரெண்டு ஆண்டுகளுக்கு முன் அதை செய்து இந்து மதத்தின் உணர்வை துஷ்பிரயோகம் செய்தார்.

தன் கணவர் இயக்க, ஓரினச்சேர்க்கையாளர் படத்தில் நடித்த இந்த கருமாந்திரப் பெண், ஐயப்பனின் கருப்பு ஆடையை அணிய எத்தனை துணிவு இருந்திருக்க வேண்டும்? ஆபாச படங்களையும், மது குடிக்கும் படங்களையும் வெளியிட்டவர். 

இஸ்லாத்தின் எல்லா கொள்கைகளுக்கும் எதிரான இவரை இஸ்லாத்திலிருந்து இனி விலக்கி வைத்து என்ன பயன்? உள்ளாடையை விலக்க தயங்காத ரெஹானா, இஸ்லாத்திலிருந்து விலக்கி வைத்தால் திருந்தவா போகிறார்?” என்று கேட்டிருக்கிறார்கள். 

இந்த விமர்சனத்துக்கு ஆதரவு மழை பொழிகிறது.
 

PREV
click me!

Recommended Stories

பீர் -ஒயின் பிரியர்களுக்கு ஜாக்பாட்..! இனி 90% வரை மலிவாக கிடைக்கும்..!
நாளை நடக்கப்போகும் மாபெரும் சம்பவம்.. உலகமே வியக்கப்போகும் இந்தியா..!