CUET PG 2022: கவனத்திற்கு.. இந்தெந்த படிப்புகளுக்கு இந்த ஆண்டு முதல் நுழைவுத்தேர்வு.. அறிவித்தது யுஜிசி..

By Thanalakshmi VFirst Published May 20, 2022, 10:45 AM IST
Highlights

மத்திய பல்கலைக்கழகங்களில் முதுகலை பட்டப்படிப்புகளுக்கும் இந்த ஆண்டு முதல் சியுஇடி எனும் பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என்று பல்கலைக்கழக மானியகுழு தெரிவித்துள்ளது. 
 

நாடு முழுவதும் மொத்தம் 45 மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளன. இங்கு இளங்கலை பட்டப்படிப்புகளுக்கு சேரும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் சியுஇடி ( Central University Eligibility Test) எனும் பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி, மாணவர்கள் தங்கள் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்களுக்கு பதிலாக நூழைத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மட்டுமே கருதிக்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனை தொடர்ந்து பல்கலைக்கழக நுழைவுத் தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கு வரும் மே 22 ஆம் தேதி கடைசி தினமாகும். இதுவரை 10.46 லட்சத்திற்கு அதிகமான மாணவர்கள் பதிவு செய்திருப்பதாக யுஜிசி தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க: இந்திய தூதரகத்தின் இணையதளத்தில் பதிவு செய்யுங்கள்... இலங்கையில் உள்ள இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்!!

பொது நுழைவுத்தேர்வு குறைந்தபட்ச தகுதி அளவுகோல்களை அந்தந்த பல்கலைக்கழகங்கள் நிர்ணயிக்கும் என யு.ஜி.சி. தலைவர் ஜெகதீஷ் குமார் அறிவித்து இருந்தார் . இந்நிலையில் தொடக்கத்தில் இருந்தே மத்திய பல்கலைக்கழக பொது நுழைவுத்தேர்வுக்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது குறிப்பிடத்தக்கது. இதனிடையே மத்திய பல்கலைக்கழகங்களில் முதுகலை பட்டப்படிப்புகளுக்கும் இந்த ஆண்டு முதல் பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படுவதாக யுஜிசி தற்போது அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக அவர் கூறுகையில், 'மத்திய பல்கலைக்கழகங்களில் 2022 கல்வி ஆண்டுக்கான முதுகலை பட்டப்படிப்புகளுக்கும் இந்த ஆண்டு முதல் பொது நுழைவுத்தேர்வு (சி.யு.இ.டி.) அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த தேர்வுகள் வருகிற ஜூலை 3-வது வாரத்தில் நடத்தப்படும். இதற்காக இன்று (நேற்று) முதல் விண்ணப்பிக்கலாம். இதற்கான கடைசி தேதி ஜூன் 18 ஆகும்' என்று தெரிவித்தார் . கம்ப்யூட்டர் அடிப்படையிலான இந்த தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தியில் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார் .

மேலும் படிக்க: இரயில் கட்டணம் உயர்கிறதா..? மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை ரத்து..? மத்திய அமைச்சர் சொன்ன பதில்...

click me!