ஜனாதிபதி பற்றி சர்ச்சை கருத்து.. பல்டி அடித்த காங்கிரஸ் எம்.பி - என்ன நடந்தது ?

By Raghupati RFirst Published Jul 29, 2022, 10:08 PM IST
Highlights

ஜனாதிபதி திரவுபதி முர்மு குறித்து காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறிய சர்ச்சை கருத்து பெரும் பரபரப்பை கிளப்பியது.

மேற்குவங்கத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது ஜனாதிபதி திரவுபதி முர்மு குறித்து அவர் சர்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்தார். இது பெரும் பரபரப்பை கிளப்பியது.

இன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நேற்று கூடியதும், ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் சர்ச்சை கருத்துக்கு பாஜக எம்பிக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மாநிலங்களவையில் இன்று பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘ஜனாதிபதி  வேட்பாளராக திரவுபதி முர்மு அறிவிக்கப்பட்டது முதல் காங்கிரஸ் கட்சி வெறுப்பை உமிழ்ந்து வருகிறது. 

மேலும் செய்திகளுக்கு..அந்தரங்க உறுப்பில் காயம்..போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் பொய் ? வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள் !

காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, நாட்டின் மிகஉயர்ந்த பதவியில் இருக்கும் முர்முவை அவதூறாகப் பேசியுள்ளார். வாய்தவறி பேசிவிட்டதாக அவர் மழுப்புகிறார். ஆனால் அவர் வேண்டுமென்றே அநாகரிகமாக பேசியிருக்கிறார். இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று கூறினார்.

இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மன்னிப்பு கோரி ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ‘ராஷ்டிரபத்னி என்கிற வார்த்தை வாய் தவறி வந்த வார்த்ததை என்பதை நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். இதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அதை ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு..ஆகஸ்ட் 3 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

click me!