
உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மருத்துவ மாணவர்களுக்கு அயல்நாட்டு மருத்துவ தணிக்கை பரிசோதனை தேர்வில் வாய்ப்பு வழங்கப்படும் என்று இந்திய மருத்துவக் கவுன்சில் தெரிவித்துள்ளது. உக்ரைனில் கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில், ரஷ்யா போர் தொடங்கியது. இதனையடுத்து அங்கு மருத்துவம் படிக்கச் சென்ற 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தாயகம் திரும்பும் சூழல் ஏற்பட்டது. அந்த மாணவர்களின் படிப்பும், எதிர்காலமும் கேள்விக்குறியான நிலையில் அவர்கள் இந்தியாவிலேயே படிப்பை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர்களை இந்தியாவில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் சேர்க்க வேண்டும் என்றும் பல்வேறு மாநில அரசுகளும் தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வந்தன. ஆனால் உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்கள், இந்தியாவில் மருத்துவம் படிக்க முடியாது என மத்திய அரசு தெரிவித்தது.
இதையும் படிங்க: 2 நாட்கள் பள்ளி விடுமுறை..144 தடை உத்தரவு..பதற்றத்தில் மக்கள் - கர்நாடகாவில் என்ன நடக்கிறது ?
மேலும் உக்ரைன் மட்டுமல்ல வெளிநாடுகளில் இருந்து வரும் மாணவர்கள் இந்தியாவில் சேர முடியாது என்றும் இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்களை, இந்தியாவில் இருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ப்பதற்கான முடிவுக்கு தேசிய மருத்துவ ஆணையம் ஒப்புதல் அளிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மாணவர்களின் நலனை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க கோரி பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார். இந்த நிலையில், உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மருத்துவ மாணவர்களுக்கு அயல்நாட்டு மருத்துவ தணிக்கை பரிசோதனை தேர்வில் வாய்ப்பு வழங்கப்படும் என்று இந்திய மருத்துவக் கவுன்சில் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: டிகிரி முடித்தவர்களுக்கு பேங்க் ஆப் பரோடா வங்கியில் வேலை..தேர்வு கிடையாது - முழு தகவல்கள் இதோ !
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், 29.04.2022 நாளன்று வழங்கப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், ரஷ்யா படையெடுப்பால், கடந்தாண்டு உக்ரைன் நாட்டில் இளநிலை மருத்துவப் படிப்புகளில் படித்து வந்த இந்திய மருத்துவ மாணவர்கள், ரஷ்யா படையெடுப்பால் இந்தியாவுக்கு திரும்பி, அதன் பின் மருத்துவப் படிப்பை முடித்ததற்கான சான்றிதழ் பெற்ற மாணவர்கள், FMGE எனப்படும் அயல்நாட்டு மருத்துவ தணிக்கைத் தேர்வுக்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இத்தேர்வுக்கு தகுதி பெற, 2022, ஜுன் 30 அன்றோ (அ) அதற்கு முன்பாகவோ மருத்துவப் படிப்பை முடித்ததற்கான சான்றிதழை மாணவர்கள் பெற்றிருக்க வேண்டும். தேர்ச்சி பெற்ற மாணவர்கள், இந்தியாவில் மருத்துவம் பார்ப்பதற்கு இரண்டு Compulsory Rotating Medical Internship என்ற பயிற்சி காலத்தை இந்தியாவில் நிறைவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள். ஈராண்டுகள் பயிற்சி முடித்த மாணவர்கள் மட்டுமே இந்தியாவில் மருத்துவராக பதிவு செய்து மருத்துவம் பார்க்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.