ஆந்திர தேர்தல் : பவன் கல்யாணுக்கு ஆதரவாக நடிகர் ராம் சரண் பிரச்சாரம்.. ரசிகர்கள் உற்சாக வரவேற்பு..

By Ramya s  |  First Published May 11, 2024, 3:50 PM IST

ராம் சரண் தனது மாமா மற்றும் ஜனசேனா தலைவர் பவன் கல்யாணை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடபட உள்ளார்.


தெலுங்கு நடிகர் ராம் சரணுக்குக்கு ராஜமுந்திரி விமான நிலையத்தில் இன்றுரசிகர்கள் உற்சாகவரவேற்பு அளித்தனர். ராம் சரண் தனது மாமா மற்றும் ஜனசேனா தலைவர் பவன் கல்யாணை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடபட உள்ளார். இதற்காக அவர் தனது தாயார் சுரேகா மற்றும் மாமா அல்லு அரவிந்த் ஆகியோருடன் பிதாபுரத்திற்கு சென்றார்.

ராம் சரண் வருவதை அறிந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அவரை வரவேற்க ராஜமுந்திரி விமான நிலையத்தில் குவிந்தனர். ரசிகர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் ராம் சரண் மற்றும் அவரின் குடும்பத்தினரை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.  இதைத் தொடர்ந்து, நடிகர், தனது தாய் மற்றும் மாமாவுடன், புனிதமான ஸ்ரீ குக்குடேஸ்வர ஸ்வாமி கோவிலுக்குச் சென்று சிறப்பு வழிபாடு நடத்துகிறார்.

Latest Videos

undefined

அடுத்த வருடமே அரசியலில் இருந்து விலகுவாரா? மோடிக்கு சவால் விடும் அரவிந்த் கெஜ்ரிவால்!

ராம் சரண் சமீபத்தில் தனது எக்ஸ் பக்கத்தில் பவன் கல்யாணுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். ராம் சரண் மட்டுமின்றி மெகா குடும்பத்தைச் சேர்ந்த மெகா ஸ்டார் சிரஞ்சீவி, அல்லு அர்ஜுன், வருண் தேஜ், சாய் துர்கா தேஜ் மற்றும் பலர், பவன் கல்யாணின் வெற்றிக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். 

ராம் சரணின் ராஜமுந்திரி பயணம் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. அங்குள்ள ஸ்ரீ குக்குடேஸ்வர ஸ்வாமி கோவிலில் தரிசனம் செய்வதற்காக பிதாபுரம் புறப்பட்டார். அங்கும் ராம் சரணை பார்க்க ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Ram Charan in Pithapuram can't control crowd here🥵🔥🔥 pic.twitter.com/leQV1xPlHA

— cultismm (@cultismm)

இதை தொடர்ந்து அவர் பவன் கல்யாணுக்காக பிதாபுரத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். அங்கு திரண்ட அவரின் ரசிகர்களை பார்த்து ராம் சரண் கையசைத்தார். அப்போது பவன் கல்யாணும் உடனிருந்தார். இந்த வீடியோவும் இணையத்தில் பரவி வருகிறது.

Snippets from 's Grand Final Showdown in Pithapuram for Babai ahead of AP Elections 2024 ❤️‍🔥 pic.twitter.com/LAhmUJgcYR

— Trends RamCharan ™ (@TweetRamCharan)

 

மே 13-ம் தேதி ஒரே கட்டமாக ஒரே கட்டமாக ஆந்திரப் பிரதேசத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல் தேர்தல் நடைபெற உள்ளது.  25 நாடாளுமன்றத் தொகுதிகளில் இருந்து 454 வேட்பாளர்களும், 175 சட்டமன்றத் தொகுதிகளில் 2,387 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.

ஜன சேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் பிதாபுரம் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் வங்கா கீதா மற்றும் காங்கிரஸின் மாதேபள்ளி சத்யானந்த ராவ் ஆகியோர் களத்தில் உள்ளனர். இன்று அங்கு தேர்தல் பிரச்சாரம் முடிவடைய உள்ள நிலையில் இன்று ராம் சரண் பிதாபுரம் தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

காங்கிரஸ் 80 முறை அரசியலமைப்புச் சட்டத்தை திருத்தியுள்ளது: நிதின் கட்கரி பகீர் தகவல்!

கடந்த முறை பிதாபுரத்தில் ஒய்.எஸ்.ஆர்.சி.பி.யின் டோரபாபு பெண்டம் 14,000 வாக்குகள் வித்தியாசத்தில் தெலுங்குதேசம் கட்சியின் எஸ்.வி.எஸ்.என்.வர்மாவை தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!