G20 Summit 2023: உலகமே உற்று நோக்கும் ஜி20 உச்சி மாநாடு! தலைமைப் பொறுப்பில் இந்தியா சாதித்தது என்ன?

By SG Balan  |  First Published Sep 7, 2023, 8:00 PM IST

இந்தியா ஜி20 நாடுகளுக்கு தலைமை வகித்ததன் மூலம் பல புதிய முயற்சிகள் மற்றும் சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு கூட்டங்களை நடத்தியதுடன் பிரம்மாண்டமான ஜி20 உச்சி மாநாட்டை டெல்லியில் நடத்துகிறது.


இந்தியா ஜி20 நாடுகளுக்கு தலைமை வகித்ததன் மூலம் பல புதிய முயற்சிகள் மற்றும் சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு கூட்டங்களை நடத்தியதுடன் பிரம்மாண்டமான ஜி20 உச்சி மாநாட்டை டெல்லியில் நடத்துகிறது.

முதலில் ஜி20 தலைமையை ஏற்ற பிறகு, G20 வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தை நடத்தி, அதில் பேச்சுவார்த்தை மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்ட முடிவுகளின் ஆவணத்தை (FMM ODCS) வெளியிட்டது. பலதரப்புவாதங்களை வலுப்படுத்துதல், பயங்கரவாதத்தை எதிர்த்தல், உலகளாவிய சுகாதாரக் கவலைகளை நிவர்த்தி செய்தல் உள்ளிட்ட முக்கியமான கருப்பொருள்களை இந்த ஆவணம் எடுத்தரைத்தது.

Tap to resize

Latest Videos

வரலாறு காணாத வீழ்ச்சியில் இந்திய ரூபாய்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 83.22 ஆகச் சரிவு!

'தெற்குலக நாடுகளின் குரல்' என்ற தலைப்பில் முதல் உச்ச மாநாட்டை நடத்தியதில் இந்தியாவின் பங்கு முக்கியமானது. இரண்டு நாட்களில் பத்து அமர்வுகளில் 125 நாடுகளின் பங்கேற்புடன், நிகழ்வு நடைபெற்றது. வளரும் நாடுகளின் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்கான ஒரு தளத்தை இந்த மாநாடு வழங்கியது.

இந்தியாவின் தலைமையின் கீழ் G20 விவசாய விஞ்ஞானிகளின் கூட்டம் (MACS) நடைபெற்றது. இதில் வேளாண் நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கலந்துகொண்டனர். MAHARISHI என்ற பெயரில் சிறுதானியங்கள் மற்றும் பிற தானியங்கள் குறித்த ஆராய்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.

எல்எல்ஏ, அமைச்சர்களுக்கு ரூ.40,000 சம்பள உயர்வு! மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பு

G20 EMPOWER குழுவின் முதல் கூட்டமும் இந்தியா தலைமையின் கீழ் தான் நடந்துள்ளது. பெண்களுக்கு பொருளாதார சக்தியை வழங்குதல், அதிகாரமளித்தல் உள்ளிட்ட நோக்கங்களுடன் G20 தலைவர்கள் இந்த மாநாட்டில் கூடினர். தனியார் துறையில் தலைமைப் பொறுப்புகளில் பெண்களுக்கு அதிகாரமளிப்பதை விரைவுபடுத்துவதை வலியுறுத்தப்பட்டது.

G20 டிஜிட்டல் பொருளாதார அமைச்சர்கள் கூட்டத்திற்குப் பிறகு, டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவது குறித்து ஒருமித்த கருத்து எட்டப்பட்டது. மேலும், டிஜிட்டல் பொருளாதாரத்தில் சைபர் பாதுகாப்பு பற்றியும் ஒருமித்த கருத்து உருவானது.

இந்தியாவின் G20 தலைமையின்போது, தலைமை அறிவியல் ஆலோசகர்கள் வட்டமேசை (G20-CSAR) கூட்டமும் தொடங்கப்பட்டது. நோய் கட்டுப்பாடு, தொற்றுநோய்க்கான தயார்நிலை போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்தியா ஜி20 தலைமையில் இருந்தபோதுதான், 21ஆம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்வதற்கான செயல்திறனை மேம்படுத்துவதற்கு பரிந்துரைகளை வழங்குவதற்காக நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

10% ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் பிரபல வீடியோ ஸ்ட்ரீமிங் நிறுவனம் ரோகூ!

click me!