இந்து மத நம்பிக்கை சர்ச்சை: மவுனம் சாதிக்கும் காங்கிரஸ் தலைமை - ரவிசங்கர் பிரசாத் சாடல்!

By Manikanda Prabu  |  First Published Sep 7, 2023, 5:57 PM IST

இந்து மத நம்பிக்கை சர்ச்சையில் காங்கிரஸ் தலைமை மவுனம் சாதிப்பதாக பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்


காங்கிரஸின் கூட்டணி கட்சியான திமுக மற்றும் அதன் சொந்த கட்சித் தலைவர்கள் சிலரின் இந்து மத நம்பிக்கை குறித்த சர்ச்சைக்குரிய கருத்துகள் தொடர்பாக காங்கிரஸ் உயர்மட்டத் தலைமை மவுனம் காப்பதாக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் குற்றம் சாட்டியுள்ளார்.

பீகார் மாநிலம் பாட்னாவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘சமீபத்தில் நடைபெற்ற இந்தியா கூட்டணி கூட்டத்தில் இந்துக்களை இழிவுபடுத்தும் முடிவு எடுக்கப்பட்டதா?’ என கேள்வி எழுப்பினார். எதிர்க்கட்சிகளின் கூட்டணியை ஆணவம் மிக்கது என விமர்சிப்பது எதற்கும் அல்ல; அதன் உறுப்பினர்கள் அகந்தையில் உள்ளனர். இந்தியாவின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் அகந்தையில் உள்ளதால்தான் அவர்களை அப்படி அழைக்கிறோம் என ரவிசங்கர் பிரசாத் குற்றம் சாட்டினார்.

Latest Videos

undefined

தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 'சனாதன தர்மத்தை' மலேரியா மற்றும் டெங்குவுக்கு ஒப்பிட்டதைக் குறிப்பிட்டு பேசிய அவர், “இப்போது மற்றொரு திமுக தலைவர் ஆ.ராசா என்பவர், இந்து மத நம்பிக்கையை தொழுநோய் மற்றும் எச்.ஐ.வி./எய்ட்ஸ் நோயுடன் ஒப்பிட்டுள்ளார்” என குற்றம் சாட்டினார்.

ஜி20 தலைவர்களுக்கு இரவு விருந்து: அம்பானி, ஆதானிக்கு அழைப்பு!

காங்கிரஸில் உள்ளவர்கள், கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி பரமேஸ்வரா போன்றவர்கள் இந்து மதத்தின் தோற்றம் குறித்து கேள்வி எழுப்புகிறார்கள் என சாடிய அவர், காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மகன் சனாதன தர்மத்தைப் பற்றி நாளுக்கு நாள் கீழ்த்தரமான அறிக்கைகளை வெளியிடுகிறார் என்றும் குற்றம் சாட்டினார்.

இந்து நம்பிக்கையை இழிவுபடுத்துவதை பாஜக ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று உறுதியளித்த ரவிசங்கர் பிரசாத், சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரின் மவுனம் மக்களை குழப்புகிறது எனவும் தெரிவித்தார்.

click me!