
மத்திய பிரதேசத்தில் கார் மீது லாரி மோதிய விபத்தில் மணமகன் உட்பட 9 பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசம் இச்சாவார் கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவர் குடும்பத்துடன் காரில் சிர்சி என்ற கிராமத்தை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது ஆக்ரா - மும்பை நெடுஞ்சாலை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த கண்டெய்னர் லாரி கார் மீது பயங்கரமாக மோதியது.
இதில் காரில் வந்த மணமகன் உட்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீது பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து இறந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.