ஆம் ஆத்மி கட்சி எங்கு ஆட்சிக்கு வந்தாலும் தற்காலிக ஊழியர்களை முறைப்படுத்துவோம் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்
ஆம் ஆத்மி கட்சி எங்கு ஆட்சிக்கு வந்தாலும் தற்காலிக ஊழியர்களை முறைப்படுத்துவோம் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் (எம்சிடி), 5,000 சுத்திகரிப்பு தொழிலாளர்களை முறைப்படுத்துவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
அதேபோல், கொசுக்கள் உற்பத்தியாகக்கூடிய குளிர்விப்பான்கள், மேல்நிலைத் தொட்டிகள் மற்றும் பூந்தொட்டிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதா என்பதைச் சரிபார்ப்பதற்காக தினசரி ஊதியம் பெறும் நகராட்சி பணியாளர்கள் வீட்டுப் பெருக்கப் பணியாளர்கள் 3,100 பேரை பல்பணி ஊழியர்களாக உயர்த்துவதற்கும் டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் ஒப்புதல் அளித்துள்ளது.
ஐந்து மாநில தேர்தல்: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புக்கு தடை!
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால், டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷனை பாஜக ஆட்சி செய்தபோது துப்புரவுத் தொழிலாளர்கள் சுரண்டப்பட்டனர் என்று குற்றம் சாட்டினார்.
“நாங்கள் ஒழுங்குபடுத்தும் செயல்முறையை முன்னெடுத்துச் சென்றுள்ளோம். பஞ்சாபிலும் சுமார் 30,000 தற்காலிக ஊழியர்களை முறைப்படுத்தப்படுத்தியுள்ளோம். நாங்கள் ஆட்சிக்கு வர வாய்ப்பு கிடைத்தால், எங்கு ஆட்சிக்கு வந்தாலும், நாங்கள் தற்காலிக ஊழியர்களை முறைப்படுத்துவோம்.” என்று அரவிந்த கெஜ்ரிவால் கூறினார்.
டெல்லி மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தலா ரூ1,100 வழங்குவது, தலைமை ஆசிரியர்களுக்கு வெளிநாட்டு நிறுவனங்களில் பயிற்சி, இறைச்சி கடை உரிமக் கொள்கை உள்ளிட்ட 54 திட்டங்களுக்கு டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் ஒப்புதல் அளித்துள்ளது.