தேசிய கட்சி அந்தஸ்தை இழந்தது திரிணமூல் காங். மற்றும் தேசியவாத காங். கட்சிகள்... ஆம் ஆத்மிக்கு தேசிய அந்தஸ்து!!

By Narendran S  |  First Published Apr 10, 2023, 9:23 PM IST

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தேசிய கட்சி அங்கீகாரம் ரத்து செய்த இந்திய தேர்தல் ஆணையம் ஆம் ஆத்மிக்கு அந்த அங்கீகாரத்தை அளித்துள்ளது. 


இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தேசிய கட்சி அங்கீகாரம் ரத்து செய்த இந்திய தேர்தல் ஆணையம் ஆம் ஆத்மிக்கு அந்த அங்கீகாரத்தை அளித்துள்ளது. டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. பாஜகவுக்கு டெல்லியில் பலம் இருந்தபோதிலும் அதனை முறியடித்து ஆட்சியை பிடித்தது ஆம் ஆத்மி. இதே நிலை தான் பஞ்சாபிலும் நிலவி வருகிறது. இந்த நிலையில், ஆம் ஆத்மிக்கு இந்திய தேர்தல் ஆணையம் தேசிய கட்சி அங்கீகாரத்தை அளித்துள்ளது. அதேநேரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தேசிய கட்சி அங்கீகாரம் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதையும் படிங்க: நடு ஆற்றில் நடந்த அதிசய பெண்.. கடவுளை பார்க்க குவிந்த பொதுமக்கள் - கடைசியில் நடந்த ட்விஸ்ட்

Tap to resize

Latest Videos

மேலும் அது பாரா 6பி (iii) நிபந்தனையை நிறைவேற்றியது, அதாவது நான்கு மாநிலங்களில் மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற்றது, அதாவது டெல்லி, கோவா, பஞ்சாப் மற்றும் மிக சமீபத்தில், குஜராத் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி தேர்தல் ஆணையத்தின் உத்தரவில், உத்தரபிரதேசத்தில் RLD, ஆந்திராவில் BRS, மணிப்பூரில் PDA, புதுச்சேரியில் PMK, மேற்கு வங்கத்தில் RSP, மிசோரமில் MPC ஆகிய கட்சிகளுக்கு வழங்கப்பட்ட மாநில கட்சி அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது.

இதையும் படிங்க: அரசு அலுவலகங்க வேலை நேரம் மாற்றம்... மின்சார பயன்பாட்டை குறைக்க பஞ்சாப் அரசு நடவடிக்கை!!

அவை பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளாகவே (RUPP) இருக்கும். நாகாலாந்தில் உள்ள லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்), மேகாலயாவில் மக்கள் குரல் கட்சி மற்றும் திரிபுராவில் திப்ரா மோதா ஆகியவை அங்கீகரிக்கப்பட்ட மாநில அரசியல் கட்சி அந்தஸ்து வழங்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பாஜக, காங்கிரஸ், சிபிஐ(எம்), பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி), தேசிய மக்கள் கட்சி (என்பிபி) மற்றும் ஆம் ஆத்மி ஆகியவை தற்போதைய தேசியக் கட்சிகள் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!