
வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்யவும், புதிதாக பான்கார்டுக்கு விண்ணப்பிக்கவும் ஆதார் கார்டை கட்டாயமாக்க மத்தியஅரசு முடிவு செய்துள்ளது. இதற்கான சட்டத்திருத்தம் இந்த வாரத்தில் நிறைவேற்றப்படும் எனத் தெரிகிறது. அதன்பின் ஜூலை1-ந்தேதி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வரும்.
நிதி அமைச்சர் அருண்ஜெட்லி, 40-க்கும் மேற்பட்ட சட்டத்திருத்தங்கள் கொண்ட நிதி மசோதாவை நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
அதில் ரொக்கப் பரிமாற்றத்தை பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ரூ. 3 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாகக் குறைப்பது, பான்கார்டு விண்ணபிக்க, வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்ய ஆதார் எண்ணை கட்டாயக்குவது உள்ளிட்ட40 திருத்தங்கள் அடங்கும்.
பான் கார்டு வாங்கவும், வருமானவரி ரிட்டன் தாக்கலுக்கும் ஆதார் எண்ணைக் கட்டாயமாக்க இருப்பதன் மூலம், கருப்பு பணம் பங்குச்சந்தையில் புரள்வதை தடுக்க முடியும், பரஸ்பர நிதித்திட்டங்கள் வாயிலாக கணக்கில் வராத பணம் முதலீடுசெய்வதையும், வங்கிகள் மூலம் முதலீடு செய்யப்படுவதையும் தடுக்க முடியும்.
நிதி மசோதா திருத்தம் 139 ஏஏ-ன்படி, “ ஆதார் எண் பெறுவதற்கு தகுதியான ஒவ்வொரு தனிநபரும், ஜூலை 1-ந்ேததி முதல் பான்கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது, ஆதார் எண்ணை கட்டாயம்தெரிவிக்க வேண்டும்.
அதோபோல, வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்யும் போதும் ஆதார் எண்ணை கட்டாயமாக குறிப்பிட வேண்டும். ஆதாலால், வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்பவர்கள், பான்கார்டு வைத்து இருப்பவர்கள், அல்லது இல்லாதவர்கள் ஆதார் எண்ணுக்கு விண்ணப்பிக்கலாம்.
அதேசமயம், பான்கார்டு ஏற்கனவே வைத்து இருப்பவர்களும் மத்திய அரசின் விதிமுறைப்படி, ஆதார் எண்ணை கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும்.
அவ்வாறு ஆதார் எண், இணைக்கப்படாமல், அல்லது விண்ணப்பிக்கும் போது, ஆதார் எண்தெரிவிக்கப்படாமல் இருந்தால், அது செல்லாததாக அறிவிக்கப்படும் எனத் ெதரிவிக்கப்பட்டுள்ளது.