ரயிலில் ‘டிக்கெட் வெயிட்டிங் லிஸ்டில்’ இருக்கா?.. கவலை வேண்டாம் - ஏப்ரல் 1 முதல் மாற்று ரயில் திட்டம்

 
Published : Mar 21, 2017, 09:52 PM ISTUpdated : Sep 19, 2018, 02:43 AM IST
ரயிலில் ‘டிக்கெட் வெயிட்டிங் லிஸ்டில்’ இருக்கா?.. கவலை வேண்டாம் - ஏப்ரல் 1 முதல் மாற்று ரயில் திட்டம்

சுருக்கம்

Train ticket on the waiting list is there? .. Do not worry - Alternative rail project from April 1

ரயிலில் சாதாரண ‘மெயில்’, ‘எக்ஸ்பிரஸில்’ டிக்கெட் முன்பதிவு செய்து அது ‘வெயிட்டிங் லிஸ்டில்’ இருந்தால் இனி அது குறித்து கவலைப்படத் தேவையில்லை. அதற்கு பதிலாக ராஜ்தானி அல்லது சதாப்தியில் செல்லும் வாய்ப்பை  பயணிகளுக்கு ரெயில்வே வழங்கப் போகிறது.

ஏப்ரல் 1-ந்தேதியில் இருந்து ‘விகல்ப்’ எனும் திட்டத்தை நாடுமுழுவதும் நடைமுறைப்படுத்துகிறது. இதன்படி, வெயிட்டிங் லிஸ்டில் இருக்கும் பயணிகளுக்கு, அதே வழித்தடத்தில், அடுத்து வரும் ரெயிலில் டிக்கெட் உறுதி செய்யப்பட்டு பயணிக்க வாய்ப்பு அளிக்கப்படும். இதற்காக டிக்கெட்முன்பதிவுசெய்யும் போதே, இந்த வாய்ப்பை தேர்வுசெய்ய வேண்டும்.

இந்த திட்டத்தில் பயணிகளிடம் இருந்து கூடுதலாக எந்தவிதமான கட்டணமும் வசூலிக்கப்படாது. அதேசமயம், மீதம் இருக்கும் தொகையும் திருப்பி அளிக்கப்படாது. ‘விகல்ப்’ திட்டத்தில், சாதாரண ரெயிலில் டிக்கெட் முன்பதிவு செய்து இருந்து வெயிட்டிங் லிஸ்டில் இருந்தாலும், ராஜ்தானி,சதாப்தி, துரந்தோ, சுவிதா உள்ளிட்ட சொகுசு ரெயில்களில் பயணிக்கலாம்.

ரயில்வே துறைக்கு ஆண்டுதோறும், டிக்கெட் முன்பதிவு ரத்து மூலம் ரூ.7500 கோடி வீணாகிறது. இதைத் தடுக்கும் வகையில், இந்த திட்டம் கொண்டு வரப்படுகிறது.

இது குறித்து ரெயில்வே துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், “விகல்ப் திட்டம் என்பது பயணிகளுக்கு நண்பன் போன்று செயல்பட்டு, டிக்கெட்முன்பதிவுசெய்து வெயிட்டிங் லிஸ்டில் இருக்கும் பணிகளுக்கு மாற்று ரெயில்வசதி ஏற்படுத்தி தருவதாகும்.இந்த திட்டத்தின் மூலம், பயணிகளுக்கு மாற்றுரெயிலும் ஏற்பாடு செய்து தரப்படும், அதிகமான பயணிகளையும் பயணிக்க வைக்க முடியும். கூடுதலாக பயணிகளிடம் இருந்து கட்டணம் வசூலிக்கமாட்டோம்.’’ என்றார்.

இந்த திட்டம் தற்போது, டெல்லி-லக்னோ, டெல்லி-ஜம்மு, டெல்லி-மும்பை ஆகிய வழித்தடங்களில் கடந்த ஆண்டு நவம்பர் 1-ந்தேதி முதல் சோதனை முயற்சியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது ஏப்ரல் முதல் நாடுமுழுவதும் நடைமுறைக்கு வருகிறது.

ஆன்-லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, இந்த வாய்ப்பு அதில் தரப்பட்டு இருக்கும். அதேபோல, கவுன்ட்டரில் டிக்கெட் முன்பதிவிலும் இந்த வாய்ப்பு இருக்கும். இதை பயணிகள் பயன்படுத்தலாம்.

பயணிகள் விகல்ப் திட்டத்தில் டிக்கெட் முன்பதிவுசெய்து அது வெயிட்டிங்லிஸ்டில் இருந்தால், மாற்று ரெயில் குறித்த பெயர், நேரம், இருக்கை உள்ளிட்டவை பயணியின் மொபைல் எண்ணுக்கு தெரிவிக்கப்படும்.

அதேசமயம், மாற்று ரெயிலில் செல்லும் பயணியின் பெயர் உண்மையாகடிக்கெட் முன்பதிவு செய்து இருந்த ரெயிலின் காத்திருப்போர் பட்டியலில் இருக்காது. மாற்று ரெயில் வரும்போது, அதில் பயணியின் பெயர், இருக்கை எண் ஒதுக்கப்பட்டு இருக்கும்.

PREV
click me!

Recommended Stories

இதுதான் மறுசுழற்சியா? கேரளாவில் சர்ச்சையை கிளப்பிய பீர் பாட்டில் கிறிஸ்துமஸ் மரம்!
உக்ரைன் போர்.. ரஷ்ய ராணுவத்தில் சேர்ந்த 26 இந்தியர்கள் பலி; போர்முனையில் சிக்கியுள்ள 50 பேர்!