
ரெயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளக் கணக்கில் ஆதார் எண்ணை இணைத்தவர்கள் மாதத்துக்கு 12 ரெயில்டிக்கெட்டுகள் வரை முன்பதிவு செய்து கொள்ள முடியும் எனத் ரெயில்வே தெரிவித்துள்ளது.
இதற்கு முன் ரெயில்வே இணையதளத்தில் கணக்கு வைத்துள்ள ஒருவர் ஆன்-லைன் மூலம் மாதத்துக்கு 6 டிக்கெட் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என்ற நிலை இருந்து. அது இப்போது 12ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ரெயில்வே துறையின் இந்த இத்தரவு கடந்த மாதம் 26-ந்தேதியில் இருந்து நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பயணிகள் தங்களின் ஐ.ஆர்.சி.டி.சி. கணக்கில் ஆதார் எண்ணை இணைக்க ஊக்கப்படுத்தும் நோக்கில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஐ.ஆர்.சி.டி.சி. அதிகாரிகள் தரப்பில் கூறுப்படுவதாவது,
“ ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் கணக்கு வைத்து இருக்கும் பயணிகள் ஆதார் எண்ணை இணைக்காமல் இருந்தால், அவர்கள் மாதத்துக்கு 6 டிக்கெட் வரை தொடர்ந்து முந்பதிவு செய்யலாம். தட்கல் மூலம் முன்பதிவு செய்பவர்கள் 4 டிக்கெட்வரை மட்டுமே முன்பதிவு செய்யலாம்.
6 டிக்கெட்டுக்கு மேல் முன்பதிவு செய்ய விரும்பினால், இணையதளத்தில் உள்ள ‘மை புரபைல்’ பக்கத்தில் தங்களின் ஆதார் எண்ணை பதிவு செய்தால், ஓ.டி.பி.எண் அவர்களின் செல்போன் எண்ணுக்கு அனுப்பிவைக்கப்படும். அதை பதிவு செய்யும் பட்சத்தில் ஆதார் எண் சேர்க்கப்பட்டு உறுதி செய்யப்படும்.
மேலும், 6 டிக்கெட்டுகளுக்கு அதிகமாக முன்பதிவு செய்யும் பட்சத்தில், கூடுதலாக முன்பதிவு செய்யப்பட உள்ள பயணிகளின் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும். அதை மாஸ்டர் லிஸ்ட்டில் குறிப்பிட்டால் அது, ‘ஓ.டி.பி. பாஸ்வேர்டு’ மூலம் உறுதி செய்யப்படும்.
ரெயில்துறையின் இந்த முடிவு மூலம் டிக்கெட் முன்பதிவு செய்வதில் செய்யப்படும் மோசடி வேலைகள் தடுக்கப்படும், போலியாக இணையதளத்தில் பதிவு செய்து டிக்கெட் முன்பதிவுசெய்வது தடுக்கப்படும் என அரசு நம்புகிறது’’ எனத் தெரிவித்தார்.