போட்டியில் தோல்வி அடையும் நபர் முத்தம் வழங்க வேண்டும் என விதியின் அடிப்படையில் நடைபெற்ற போட்டியில், மாணவி ஒருவர் மாணவனுக்கு உதட்டு முத்தம் வழங்கிய காட்சி சமூக வலை தளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நவீன உலகத்தில் மாணவர்கள்
நவீன உலகத்தில் மாணவ, மாணவிகளின் செயல்பாடுகளை பார்த்து அதிர்ச்சி அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளி மாணவிகள் மது குடிப்பது. காதலனுக்காக தலை முடியை பிடித்துக்கொண்டு சண்டை போடுவது, ப்ள்ளி வகுப்பறையிலேயே தாலி கட்டுவது, ஆசிரியர்களை எதிர்த்து பேசுவது. அடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வரும் காட்சிகள் அவ்வப்போது சமூக வலை தளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தும். இந்தநிலையில் கல்லூரி ஒன்றில் மாணவி, மாணவன் ஒருவனுக்கு லிப் கிஸ் கொடுத்த காட்சி தற்போது பரவி அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கர்நாடகா மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள மங்களூருவில் தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் பியூசி படிக்கும் மாணவ, மாணவிகள் நண்பர்களின் அறையில் விளையாட்டு போட்டியை நடத்தியுள்ளனர். சினிமா படத்தில் வருவதை போல போட்டி போட்டு விளையாடியுள்ளனர். சுற்றி விடும் பாட்டில் யார் பக்கம் நிற்கிறதோ அவர்கள் கூறுவதை மற்றவர் செய்ய வேண்டும் அந்த வகையில், வெற்றி பெற்ற மாணவன், மாணவிக்கு லிப் கிஸ் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
10 வயது சிறுமிக்கு மது ஊத்திக்கொடுத்த இளைஞர்கள்.. வைரல் வீடியோ - 6 பேர் அதிரடி கைது !
மாணவியை ஸ்கூல் மொட்டை மாடி அறையில் வைத்து பிரின்ஸ்பல் மகன் செய்த காரியம்... வெளியான பகீர் தகவல்
முத்த போட்டியால் பரபரப்பு
இதனையடுத்து அந்த மாணவனும், மாணவியும் லிப் கிஸ் கொடுத்துள்ளனர். இரண்டு பேரும் முத்தம் கொடுப்பதை சுற்றி நின்றிருந்த மாணவர்கள் கை தட்டி உற்சாகம் படுத்தினர். இந்த காட்சிகளை மாணவன் ஒருவன் மொபைல் போன் மூலம் வீடியோ பதிவு செய்துள்ளான். அந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் பரவி வருகிறது. இந்த காட்சிகளை பார்த்த பள்ளி நிர்வாகம் அதிர்ச்சி அடைந்தது. மேலும் பள்ளி மாணவர்களின் பெற்றோரும் அவமானத்திற்குள்ளாகியுள்ளனர். இதனையடுத்து கர்நாடக மாநில கல்வித்துறை இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தியுள்ளது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் முத்த விளையாட்டின் போது மாணவர்கள் போதை பொருட்களை உட்கொண்டனரா எனவும் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்த மங்களூர் போலீஸ் கமிஷ்னர் சசிக்குமார் இந்த சம்பவம் தொடர்பாக கல்லூரி மாணவர் ஒருவரை கைது செய்துள்ளதாகவும் கூறினார்.
இதையும் படியுங்கள்
தேனிலவு சென்ற ஜோடி..ரூம் கதவை திறந்த பார்த்த ஊழியர் அதிர்ச்சி - பிணமாக கிடந்த சம்பவம்