
துப்பாக்கியுடன் சிறுத்தையை வேட்டையாடும் மகாராஷ்டிரா அமைச்சர் பற்றி வெளியான வீடியோ குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.
3 பேரை கொன்ற சிறுத்தை
மாகாராஷ்டிர மாநிலம் ஜால்கோன் மாவட்டத்தில் உள்ள சாலிஸ்காவோன் பகுதியில் சிறுத்தை ஒன்று ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. கடந்த 4 மாதங்களில் 3 பேரை இந்த சிறுத்தை கடித்து குதறி கொன்று உள்ளது.
இந்த சிறுத்தையை வேட்டையாட வனத்துறையும் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இந்த பகுதி சர்ச்சைக்கு பெயர் போன மகாராஷ்டிர அமைச்சர் மகாஜன் தொகுதியின் கீழ் வருகிறது.
கையில் துப்பாக்கியுடன்...
இந்த நிலையில், அமைச்சர் மகாஜன் தனது கையில் துப்பாக்கியுடன் சிறுத்தையை வேட்டையாட சென்ற வீடியோ ஒன்று சமூக வலைதலங்களில் வைரலாக பரவி வருகிறது.
இவர் ஏற்கனவே நவம்பர் மாதத்தில், மதுவிற்கு பெண்களின் பெயரிட்டால் மது விற்பனை அமோகமாக உயரும் என்று கூறி இருந்தார்.
நடவடிக்கை
தற்போது இந்த சிறுத்தை விவகாரத்திலும் மகாஜன் சிக்கி உள்ளார். இது இவரது 5-வது சர்ச்சை சம்பவமாகும்.
இது தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்க எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.