கேரளாவில் ஒரு தமிழ் கலெக்டர்! கோட்டயம் மாவட்டத்தை அசத்தும் மதுரை பெண் விக்னேஷ்வரி ஐஏஎஸ்

By SG Balan  |  First Published Jun 11, 2023, 2:38 PM IST

தமிழ்நாட்டில் மதுரையைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகளான விக்னேஷ்வரி - உமேஷ் தம்பதி கேரளாவில் கோட்டயம், எர்ணாகுளம் மாவட்டங்களில் கலெக்டர்களாக உள்ளனர்.


மதுரையைச் சேர்ந்த பெண் ஐஏஎஸ் அதிகாரி விக்னேஷ்வரி கேரள மாநிலத்தில் கலெக்டராகப் பொறுப்பேற்றுள்ளார். கேரளாவில் பல முக்கிய பொறுப்புகளில் பணிபுரிந்திருக்கும் அவர் தற்போது கோட்டயம் மாவட்ட் ஆட்சியராக பொறுப்பேற்றுள்ளார். கோட்டயம் மாவட்ட கலெக்டராக இருந்த ஜெயஸ்ரீ ஓய்வு பெற்றதால் விக்னேஷ்வரி கோட்டயம் ஆட்சியராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இதற்கு முன் கேரள மாநிலத்தின் சுற்றுலாத்துறை மேம்பாட்டு கழக இயக்குநர் பொறுப்பை வகித்து வந்தார். தற்போது, கோட்டயம் மாவட்டத்தின் 48வது ஆட்சியராக விக்னேஷ்வரி பொறுப்பேற்று இருக்கிறார். முன்னதாக உயர்கல்வி கல்வி இயக்குநர் பதவியிலும் சிறப்பாக பணியாற்றிய விக்னேஷ்வரி ஐஏஎஸ் மக்களிடம் நிறைய பாராட்டுகளை அள்ளியவர்.

Latest Videos

தேசிய உணவுப் பாதுகாப்பு பட்டியலில் மதுரைக்கு 9வது இடம்; தமிழகத்தில் 3வது இடம்!

2015ஆம் ஆண்டின் கேரளா கேடரில் ஐஏஎஸ் அதிகாரியாகத் தேர்ச்சி பெற்றவர் விக்னேஷ்வரி. தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தில் உள்ள எஸ்.எஸ்.காலனியைச் சேர்ந்தவர். இவரது தந்தை வெள்ளைச்சாமி, தாயார் சாந்தி. பெற்றோர் இருவரும் இப்போது மதுரையிலேயே வாழ்த்து வருகின்றனர்.

விக்னேஷ்வரி ஐஏஎஸ் திருமணம் செய்துகொண்டவரும் ஒரு ஐஏஎஸ் அதிகாரிதான். கணவர் உமேஷ் ஐஏஎஸ் மதுரை தெப்பக்குளம் பகுதியைச் சேர்ந்தவர். அவரும் கேரளாவில்தான் எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியராக இருக்கிறார். எர்ணாகுளம் விக்னேஷ்வரி பணிபுரியும் கோட்டயம் மாவட்டத்துக்கு அருகிலேயே இருக்கிறது.

மகாராஜா கல்லூரி முறைகேட்டை ரிப்போர்ட் செய்த ஏசியாநெட் செய்தியாளர் அகிலா நந்தகுமார் மீது வழக்குப்பதிவு

கோட்டயம் மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்றவுடன், மக்களின் கருத்துகளை கேட்டுச் செயல்படுவேன் என உறுதி கூறியுள்ளார். மக்கள் கருத்துகளுக்கு ஏற்ப முக்கிய பிரச்சனைகளுக்கு முன்னுரிமை கொடுத்து நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து சமூக வலைத்தளங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த இருப்பதாவும் விக்னேஷ்வரி குறிப்பிட்டுள்ளார்.

ஜப்பான் தூதர் பகிர்ந்த வீடியோ... மனைவியிடம் தோல்வி அடைந்ததற்கு வாழ்த்து கூறிய பிரதமர் மோடி!

click me!