ஜப்பான் தூதர் பகிர்ந்த வீடியோ... மனைவியிடம் தோல்வி அடைந்ததற்கு வாழ்த்து கூறிய பிரதமர் மோடி!

By SG Balan  |  First Published Jun 11, 2023, 12:00 PM IST

ஜப்பானிய தூதர் ஹிரோஷி சுசுகியின் வீடியோவுக்கு ட்விட்டரில் பதிலளித்த பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் பல்வேறு உணவு வகைகளையும் தேடிப் பிடித்து சுவைக்கும் அணுகுமுறையை பாராட்டியுள்ளார்.


இந்தியாவிற்கான ஜப்பானிய தூதர் ஹிரோஷி சுசுகி தன் மனைவியுடன் இந்தியா உணவு வகைகளை சுவைத்த அனுபவத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவரது ட்விட்டரில் அவரது பதிவுகள் பாராட்டுகளை குவித்து வருகின்றன. சமீபத்தில் அவர் வெளியிட்ட வீடியோவுக்கு பிரதமர் மோடியின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் சாலையோட கடையில் காரமான உணவை சாப்பிட்டதாகவும் அதைச் சாப்பிடுவதில் மனைவி தன்னை தோற்கடித்துவிட்டதாவும் ஹிரோஷி சுசுகி தனது பதிவில் கூறியுள்ளார். சுஸுகி தனது புனே பயணித்தின்போது வாடா பாவ் மற்றும் மிசல் பாவ் போன்ற பிரபலமான மஹாராஷ்டிர உணவு வகைகளை சுவைத்ததாகவும் அந்த அனுபவத்தை ரசித்தாலும், அதில் காரம் சற்று அதிகமாகவே இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Latest Videos

மகாராஜா கல்லூரி முறைகேட்டை ரிப்போர்ட் செய்த ஏசியாநெட் செய்தியாளர் அகிலா நந்தகுமார் மீது வழக்குப்பதிவு

This is one contest you may not mind losing, Mr. Ambassador. Good to see you enjoying India’s culinary diversity and also presenting it in such an innovative manner. Keep the videos coming! https://t.co/TSwXqH1BYJ

— Narendra Modi (@narendramodi)

வைரலான ஹிரோஷியின் வீடியோவை ரீட்வீட் செய்து கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, "ஜப்பானிய தூதர் அவர்களே, இது போன்ற போட்டியில் தோல்வி அடைவது ஏமாற்றம் அளிக்காது. இந்தியாவின் பல்வேறு உணவுகளை சுவைக்கும் உங்கள் புதுமையான அணுகுமுறை பாராட்டுக்குரியது. இது போன்ற வீடியோக்களைத் தொடர்ந்து பகிருங்கள்" என்று தெரிவித்திருக்கிறார்.

ஹிரோஷி சுசுகி தனது மற்றொரு ட்விட்டர் பதிவில், "எனக்கு இந்திய சாலையோரக் கடைகளில் கிடைக்கும் உணவுகள் பிடிக்கும்... ஆனால் அவை கொஞ்சம் காரமானவை" என்று கூறியுள்ளார்.

விமானம் தாங்கி கப்பல்களுடன் இந்திய விமானப்படை மெகா போர் பயிற்சி! சீனாவுக்கு எச்சரிக்கை!

I love street food of India🇮🇳
...but thoda teekha kam please!🌶️ pic.twitter.com/3GurNcwVyV

— Hiroshi Suzuki, Ambassador of Japan (@HiroSuzukiAmbJP)

ஹிரோஷி சுசுகி யார்?

இந்தியாவிற்கான ஜப்பானிய தூதராக உள்ள ஹிரோஷி சுசுகி, நவம்பர் 9, 2022 அன்று அதிகாரப்பூர்வமாக தனது பணியை ஆரம்பித்தார். அதன்பின் நவம்பர் 28 அன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் தனது நற்சான்றிதழ்களை வழங்கினார். 2012 முதல் 2020 வரை எட்டு ஆண்டுகள் மறைந்த முன்னாள் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயின் நிர்வாகச் செயலாளராக பணியாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நீ சின்ன பையன், என்னை மறந்துரு... கழற்றிவிட்ட காதலியை கழுத்தை நெறித்துக் கொன்ற சிறுவன்

click me!