
மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாராவிடம் போனில் ஆபாசமாக பேசிய மேற்குவங்க இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் கிரிக்கெட் வீரரும் ராஜ்யசபா உறுப்பினருமான சச்சின் டெண்டுல்கர், தனது குடும்பத்துடன் மும்பையில் வசித்து வருகிறார். அவருக்கு சாரா என்ற மகளும் அர்ஜூன் என்ற மகனும் உள்ளனர்.
சச்சினின் மகள் சாராவை செல்போனில் தொடர்புகொண்ட ஒரு நபர், சாராவிடம் ஆபாசமாக பேசியதோடு, ஆபாசமாக திட்டியும் உள்ளார். இதுதொடர்பாக சச்சின் குடும்பத்தினர் மும்பை பந்த்ரா காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையடுத்து தீவிரமாக விசாரணை நடத்திய போலீசார், சாராவிடம் ஆபாசமாக பேசியது மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த தேவ்குமார் மைதி என்ற இளைஞர் என்பதை கண்டறிந்தனர். மும்பை போலீசும் மேற்குவங்க போலீசும் இணைந்து, கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தில் தேவ்குமார் மைதியை கைது செய்தனர்.