
கடந்த ஜுலை 1 ஆம் தேதி 12 ,02 மணிக்கு ஜி.எஸ்.டி வரி அமல்படுத்தப்பட்ட நேரத்தில் ராஜஸ்தானில் பிறந்த ஒரு குழந்தைக்கு பெற்றோர்கள் ஜிஎஸ்டி என பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.
ஒரே நாடு, ஒரே வரி என்பதை நடைமுறைப்படுத்தும் வகையில் கடந்த ஜுன் 30 ஆம் தேதி நள்ளிரவில் ஜிஎஸ்டி வரிவிதிப்பு அமல்படுத்தப்பட்டது.
நாராளுமன்ற வளாகத்தில் கடந்த 30-ஆம் தேதி நள்ளிரவு இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. குரயரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும், பிரதமர் நரேந்திர மோடியும் இணைந்து இதை அறிமுகப்படுத்தினர்.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் பீவா பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு ஜூலை 1 ஆம் தேதி சரியாக 12.02 மணிக்கு குழந்தை பிறந்தது. இதையடுத்து ஜிஎஸ்டி வரி அறிமுக நேரத்தில் பிறந்த அந்த குழந்தைக்கு பெற்றோர் ஜிஎஸ்டி என பெயர் சூட்டினர்.
குழந்தைக்கு ஜிஎஸ்டி என பெயர் வைத்ததை அறிந்த ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜே, தனது டுவிட்டர் பதிவில், ஜிஎஸ்டி குழந்தைக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.
ஜிஎஸ்டி என பெயரிடப்பட்ட அந்த குழந்தையை அப்பகுதி மக்கள் அனைவரும் வந்து பார்த்து வாழ்த்து தெரிவித்துச் செல்கின்றனர்.